Tuesday, January 20, 2015

My poems of the recent past

பனிக்கு இவள் நான் போர்த்தும் போர்வையோ
இனிப்பு தானிவள் பார்க்கும் பார்வையோ
தனித்துவம் இவளின் காதல் உள்ளமோ
தினந்தினம் இவள் என் மனதின் துள்ளலோ
பதிந்து போனது இவளின் பாசமோ
உதிர்ந்து போனது எந்தன் ஆவேசமோ
சரிந்து நிற்பது வாழ்வின் துன்பமோ
விரிந்து பறப்பது விடியும் இன்பமோ...

-
பாலசாண்டில்யன்

சரிந்தது சேலை அல்ல
அவள் மனது
விடிந்தது காலை அல்ல
பூரிப்புப் பொழுது


யாருமில்லா ஒரு தீவில் 
ஒரு புலி போல நானிருந்தேன் 
ஏனோ அங்கு நீ வந்து என்னை ஏன் 
தொந்தரவு செய்கின்றாய் ...
இக்கதை ஏன் தொடர்கின்றது 
இன்னலிலே முடிகின்றது ...


ஆரம்பத்தில் நாம் பேசினாலும் 
அடுத்தடுத்து 
அனுபவங்கள் தாம் பேசும்...!
அறிந்ததை அனுபவம் மூலம் 
அழகாய் செய்யலாம் 
அறியாததை அனுபவித்து 
அகம் மகிழ்ந்து செய்யலாம் 
அந்தந்த வேலைகளில் 
அழகு மிளிரட்டும் 
அனைத்து வேளைகளிலும் 
ஆனந்தம் பெருகட்டும்
-
டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment