Saturday, January 10, 2015

My recent poems

நிச்சயம் என்று
காதில் விழுந்தது
நிச்சயம் அன்றே என்
காதல் விழுந்தது

இட்லி சுட்டதடா
சாம்பார் வச்சதடா
சட்னி கெட்டதடா
வயறு முட்டுதடா

ஒரு தபா லுக்கு
வுட்ட ஒடனே
நின்ன நானு குந்திக்கினேன்
குந்துன யென் மன்சு
எந்திருச்சுக்க
ஆத்தாடி இன்ன ஆச்சுனு
இன்னம் கூட பிரியல
அந்த கர்மாந்தரம்
தான் காதலா ?
-
பாலசாண்டில்யன்
காட்சிப்பிழைகளை
காட்சிகளாக காட்டிப் பிழைக்கும்
கடமை வீரர்கள் ஓயட்டும்
சாட்சியம் சொலலி சத்தியமென
சாத்தியம் ஆக்கும்
சாதனை மனிதர்கள் சாயட்டும்
சூழ்ச்சிகள் செய்திடும்
சூன்யர்கள் குறைய
சட்டம் சீறிப் பாயட்டும்
-
பாலசாண்டில்யன்
ஒற்றைப்பார்வை தருவாய்
என்று நானிருக்கும் போது
குற்றப்பார்வை ஒன்றும்
ஒற்றப்பார்வை ஒன்றும்
ஏனளித்தாய் ஏந்திழையே...
கள்ளப்பார்வை கூட
பரவாயில்லை....உன்
பாராமுகம் மட்டும் வேண்டாம்
விருப்பம் சொல்லும் உன்
கூறுமுகம் காட்டும் வரை
காத்திருப்பேன் காதலே...அன்பே..!
-
பாலசாண்டில்யன்
நீ வந்து போகிறாய்
ஜன்னல் கொசு போல
அனுமதியின்றி
நீ வந்து போகிறாய்
மின்தடை போல
முன்னறிவுப்பு இன்றி
நீ வந்து போகிறாய்
காய்ச்சல் போல
அறிகுறியின்றி
நீ வந்து போகிறாய்
wifi
அலைகற்றை போல
தடைகளின்றி
வந்து விடு
அமர்ந்து விடு
என் மனதுள்ளே ....!
-
டாக்டர் பாலசாண்டில்யன்
யாருக்கும் பயமில்லை இங்கே
-
டாக்டர் பாலசாண்டில்யன்
குனிந்து கல் எடுத்தால்
நாய்கள்
கோபித்து சத்தம் போட்டால்
பணியாட்கள்
பிரம்பு காட்டிப் பேசினால்
மாணவர்கள்
வரம்பு மீறிப் போகின்ற
மாடுகள்
கண்ணை உருட்டும் பெற்றோரிடம்
பிள்ளைகள்
மண்ணை எடுத்தாலும் நிற்காத
நதிகள்
சினந்து கொண்டு பேசினாலும்
மருமகள்கள்
மீசை வைத்த பூசணிக்கு
திருடர்கள்
கோட்டு போட்ட வைக்கோலுக்கு
பறவைகள்
கோல் எடுத்துக் காட்டினாலும்
குரங்குகள்
எத்தனை பேர் மாட்டினாலும்
ஊழல்வாதிகள்
மதி மயக்கத்தில் சிலர்
கதி கலக்கத்தில் சிலர்
விதி மாற்றத்தில் சிலர்
சதி திட்டத்தில் சிலர்
துதி பாடுவதில் சிலர்
நிதி மேம்பாட்டில் சிலர்
புது நம்பிக்கையில் சிலர்
நீங்கள் எப்படி...?!
-
பாலசாண்டில்யன்
அறிவாளிகளாக
அறிவிலிகளாக
அழகானவர்களாக
அழகு குறைந்தவர்களாக
அன்பானவர்களாக
அன்பற்றவர்களாக
அக்கறையுள்ளவர்களாக
அக்கறையற்றவர்களாக
அளிப்பவர்களாக
அள்ளுபவர்களாக
அகிலத்தில் மனிதர்கள்
அவர்களில் நாம் எப்பக்கம்?!
-
பாலசாண்டில்யன்
கனவுடன் சிலர்
கவிதையுடன் சிலர்
கற்பனையில் சிலர்
கலக்கத்தில் சிலர்
கலகத்தில் சிலர்
கவுந்தடித்து சிலர்
காதலுடன் சிலர்
காட்சி தரும் சிலர்
கவலையில் சிலர்
கண்மறைவில் சிலர் - அனைத்தும்
கலந்தவர்களின் உலகம்..!!
-
பாலசாண்டில்யன்
கடலுக்குள் உப்பு மட்டுமா?
இல்லை....!
மீன் முத்து இன்னும் உண்டு. 
அது போலத்தான்...
நமக்குள் தப்பு மட்டுமா?
யார் சொன்னது?!
அளப்பரிய ஆற்றல் அறிவு
ஆண்டவன் தந்தது-
உணர்வோம் உவகையோடு...!
-
பாலசாண்டில்யன்

ஈட்டுவது
சேமிப்பது
பெறுவது
மட்டும்
வருமானமல்ல
வீண் குறைப்பு
கூட
உபரி தான்...
நிறைய உழைப்போம்
நிறைய ஈட்டுவோம்
தேவையானதை நுகர்வோம்
வீணடிப்பு துரோகம்...
உணர்வோம்


No comments:

Post a Comment