ஒருஒருவரைப் பார்த்தே பொய் அறிஒருவரைப்
பார்த்தே பொய் அறியலாம்...தொட்டு
நோய் அறிவதைப் போல..!
சரியெல்லாம் தவறாகும் போது தவறெல்லாம் சரியாகும். எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு.யலாம்...
தொட்டு நோய் அறிவதைப் போல..!வரைப் பார்த்தே பொய் அறியலாம்...
தொட்டு நோய் அறிவதைப் போல..!
செயல்கள்
முடியும். மனிதர்கள் கிளம்பி விடுவார்கள். வாழ்க்கை
மட்டும் உலகோடு தொடரும்.
ஊடகங்களிடம்
கேள்வி இருக்கிறது. பதில் இருக்கிறதா... பதில்
கிடைக்கிறதா... சத்தங்கள் இருந்தாலும் கருத்து யுத்தங்கள் முடிவதில்லை
..!?
செயல் எதுவாகினும் களமிறக்கும் முன்பு உடலளவில் மனதளவில்
தயார் செய்து கொள்வது மிக
அவசியம்.
நேற்று
என்பது ஊசின சோறு.. இன்று என்பது நகரும்
ஆறு.. .நாளை
என்பது நிலையில் தேரு...!
ஒழுக்கம்:
எல்லாவற்றுக்கும் ஓர் இடம் அனைத்தும்
அதனதன் இடத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு
நேரம் அனைத்தும்
அதனதன்
நேரத்தில்
வெறியோடு
வேட்கையோடு செய்யும் எந்த வேலையும் மகிழ்ச்சி
தரலாம் மகிழ்ச்சி வேண்டும் என்று செய்யும் எந்த
வேலையும் மனச்சோர்வே தரும் ...!
முதியோர்
உரமானார் இளையோர் மரமானார் இடையோர்
ஜடமானார் இருப்போர் சந்தை மடமானார்
தண்ணீர்
பள்ளத்தை நோக்கி ஓடுவது போல
மனமும் அற்ப விஷயங்களில் நாட்டம்
கொண்டு நகர்கிறது. தடுத்து நிறுத்த முடிந்தால்
நன்மை பயக்கும்.
சுருக்கமாக
பேசுவது வலிமை. 'சுருக்' கென்று
பேசினால் வலி மெய்.
தனியாக
இருப்பதால் காதலிக்க வேண்டாம். மனம் தயாராக இருந்தால்
மட்டுமே காதலியுங்கள்...
நம்மில்
அதிகம் பேர் இன்று சில
காசுகளை சேமிப்பதாக எண்ணி பல ரூபாய்களை
எளிதில் இழந்து விடுகிறோம்
சொல்வதில்
செய்வதில் உண்மை இருக்கிறதா என்று
பார்ப்பதை விட நன்மை இருக்கிறதா
என்று பார்த்தால் நல்லது.
யார் யாரோ வருவதற்கு நம்மவரில்
ஒருவர் நம்மை வழிநடத்த வரட்டுமே...!!
செய்வன
திருந்தச் செய் இல்லையேல் திரும்பச்
செய்வாய்..!
வலி வேண்டும் என்று வலியுறுத்தி கேட்ட
பாறை ஒரு சிலையாக மாறியது.
வலி வேண்டாம் என்று சொன்ன பாறை
படியாக மாறியது.
விதைத்த
நெல்லை விட விதைக்காத புல்
வேகமாக வளர்கிறது. அப்படித்தான் நெகடிவ் எண்ணங்கள்.
மூச்சு
திணறினால் வாய் திற. பேச்சு
திணறினால் வாய் மூடு. மெய்
சிலிர்க்க மெய் சிறக்க வாய்
தான் பிரதானம்.
வாழ்க்கை
என்பது பெறுவதும் காப்பதும் அல்ல... அளிப்பதும் அன்பு
காட்டுவதும் தான்..!
பிரபலமான
நபர்கள் அனைவரும் அபிப்பிராயம் சொல்ல வேண்டும் என்று
அவசியம் இல்லை. சொல்லும் கருத்துக்கள்
பிரபலமாகும் என்று சொல்ல முடியாது.
பிழைகள்
எல்லாம் இழைகள் பிரிந்த மனதின்
குழப்பமே. மனம் தெளிந்து இருந்தால்
மடை திறந்து விடும். விடை
பிறந்து விடும்
கந்தை அழுக்கானால் கசக்கி வெளுக்கலாம். சிந்தை
அழுக்கானால் சிவனே என்றிருத்தல் நலம்...
சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டியவர்கள் சொல்லும்
இடத்தில் செல்லும் இடத்தில் சொன்னால் எல்லாமே செல்லுபடி ஆகும்,
சொல்லும்படி ஆகும்.
தர்க்கம்
எனும் மென்முறை உறவுமுறை தகர்க்கும். குதர்க்கம் எனும் வன்முறை உள்ளத்தை
தகர்க்கும்
சிறப்பா
செய்யணும் என்பதை விட சீக்கிரம்
செய்யணும் என நினைப்பவர்கள் இன்று
அதிகம்...?!
நல்ல தூக்கம் வாயார
சிரிப்பு வயிறாற உணவு மெய்யான
அன்பு உண்மை அக்கறை சாய்ந்திடத் தோள் கனிவு ஸ்பரிசம் இருந்து
விட்டால் சுவர்க்கம் வேண்டாம்....
ஆத்திரத்தின்
நிறம் அறிவின் நிறம் அல்ல.
பாத்திரத்தின் நிறம் பாலின் நிறம்
அல்ல.
உன் காலடியை பின்பற்ற சிலர்
உண்டு.. அறிந்து கொள்..! உன்
காலணியில் நுழைந்து கொள்ள எவருமில்லை புரிந்து
கொள்..!! உனது பார்வை உனது
பாதை...!!
அக மாற்றம் இல்லாமல் புற
மாற்றம் மற்றும் பிற மாற்றங்களை
செய்து என்ன பயன்?!
வாழ்நாள்
குறைவு தான் எல்லோருக்கும். அதில்
கனிவு கரிசனத்திற்கும் நேரமுண்டு..
ஏதிரி போல மாறாத மனநிலையில்
ஒருவர் இருக்கும் போது எப்போதும் மன்னிக்கும்
தன்மை கொண்ட நாம் ஏன்
மாற வேண்டும்...
ஓய்வு அறியா கூலி கேட்கா
வேலைக்காரன் தான் நமது இதயம்.
அவனை மகிழ்வாக வைத்துக் கொண்டால் உண்டு நன்மை.
ஒப்பனைகள்
எத்தனை செய்தாலும், ஒப்பாகுமா நகல் ஓர் அசலுக்கு.
பார்க்க அழகிருந்தாலும், ஞானம் வருமா ஓர்
அசடுக்கு..!
நதியின்
நீர்ச்சத்தம் கடலைச் சேரும் வரை...
மனதின் பரிசுத்தம் உன்னைக் காணும் வரை...
நச்சு மரங்களா, யாரும் மெச்சும் மரங்களா
நமது வாழ்க்கை என்பது நமது எண்ணங்கள்
எனும் விதைகளைப் பொருத்தது.
நேர்மையாக
இருந்து என்ன சாதித்தீர்கள் என்று
கேட்கலாம். நேர்மையாக இருப்பதே சாதனை தான்.
கடந்த காலம் கசப்பும் கஷ்டங்களும்
நிறைந்தது. நிகழ்காலம் நிறைவினைத் தருவது. எதிர்காலம் எல்லைகளற்றது.
அதிகாரத்தை
பெற அபிமானத்தை முதலில் பெற வேண்டும்.
அபிமானத்தை பெற அகங்காரத்தை விட
வேண்டும்.
பிறரால் கொடுக்கப்படுவது
அதிகாரம். நாமே எடுத்துக் கொள்வது பொறுப்பு. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலாம். பொறுப்பை
வேரொருவர் ஏற்க முடியாது.
வலியுறுத்தல்
செய்தால் வலி
உறுத்தல் இரண்டுமே
அகல வேண்டும்
நாம் காதுகளை
குறைவாகவும் வாயை அதிகமாகவும் திறக்கிறோம்.
அது தான் நமது பிரச்சனைக்கு
காரணம்
சரியெல்லாம் தவறாகும் போது தவறெல்லாம் சரியாகும். எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு.யலாம்...
தொட்டு நோய் அறிவதைப் போல..!வரைப் பார்த்தே பொய் அறியலாம்...
தொட்டு நோய் அறிவதைப் போல..!
No comments:
Post a Comment