Thursday, March 1, 2018

Smart Story

விபரீதம் 

புதிய டிரைவர். புதிய கார். முதலாளி ஏறி அமர்ந்தார் ஒயிலாக. வண்டி சற்று வேகமாக போய்க் கொண்டிருந்தது. மெதுவாக டிரைவர் தோளைத் தொட்டார் முதலாளி. நடந்தது அமர்க்களம்.. வண்டி தாறுமாறாக ஓடியது பிளாட்போர்ம் மீது, அங்கே உட்கார்ந்த நாய் மீது, குப்பைத் தொட்டியை தள்ளி, ஒரு வீட்டின் சுவரில் மோதி வண்டி சர்ரென்று ஒரு வழியாக  நின்றது. நடுவே டிரைவர் சத்தம், முதலாளி சத்தம், கார் மோதும் சத்தம் என்று ஒரு வினாடியில் களேபரம். நல்ல வேளை சரியான நேரத்தில் போட்ட பிரேக் காரணமாக விபரீதம் ஒன்றும் நடக்கவில்லை. முதலாளி முதல் முறை மன்னிப்பு கேட்டார். உன்னை மெதுவாகத் தான் தொட்டேன். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என்றார். 
இல்லை ஐயா இது உங்கள் தவறு இல்லை. 25 ஆண்டுகளாக நான் அமரர் ஊர்தி ஓட்டிக் கொண்டு இருந்தேன். முதல் முறையாக கார் ஓட்டுகிறேன். நீங்கள் தொட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது என்றார் டிரைவர் ஆத்மநாதன்.

No comments:

Post a Comment