Tuesday, November 17, 2015

Parenting 1

-- இமைகள் போல் இருவர் (டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பு)
-டாக்டர் பாலசாண்டில்யன் மனநல ஆலோசகர்       email: balasandilyan@yahoo.com      M - 9840027810

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலைஅதிலும் பதின் பருவக் குழந்தைகள் எப்போதும்பெற்றோருக்குத் தருவது மன அழுத்தம் தான்

நாளுக்கு நாள் பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் விரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறதுமாறி வரும்உணவுஉடைஊடகங்கள்நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஒட்டு மொத்த சமூகத்திற்கே ஒரு சவால் தான்.கூடவே குடும்பத்தில் பெருகி வரும் வசதிகள்கல்வி எதிர்பார்ப்புகள்போட்டி மனப்பாங்குதொழில் நுட்பமாற்றங்கள்சுற்றி நடக்கும் சம்பவங்கள் இவை அனைத்தும் பிள்ளை வளர்ப்பை தீர்மானிக்கின்றன.

என்ன என்ன சிக்கல்கள் பிள்ளைகள் தருவதாக பெற்றோர்கள் இன்று உணர்கிறார்கள் ? 1. இளமையில்காதல்தாமதமாக உறங்குதல்எழுதல்ஒவ்வாத உடை மற்றும் முடி அலங்காரங்கள் 2. ஊர் சுற்றி விட்டுதாமதமாக வீடு வருவதுகண்டதை தின்று விட்டு வீட்டு உணவு வேண்டாம் என்பது 3. மூத்தவர்களைஅவமதிப்பதுமோசமான படப் பாடல்கள் பார்ப்பது அல்லது கேட்பதுஅடிக்கடி பார்ட்டி அல்லது திரைப்படம்பார்க்க கூட்டமாக செல்வதுஎப்போதும் அலைபேசிடிவிஇன்டர்நெட் என இருப்பது. 4. குண்டாகி விடுவது,பொடுகுபரு வரவழைத்துக் கொள்வதுஅவை பற்றிப் பேசினால்கருத்து சொன்னால் கோபப்படுவது, 5.படிப்பில் கவனம் செலுத்தாமல் மதிப்பெண் சிக்கலில் தவிப்பது 6. பிரார்த்தனை மற்றும் வீட்டு சடங்குகளில்கலந்து கொள்வதில் வாதம் மற்றும் பிடிவாதம் 7. உறவினர்கள்நண்பர்கள் வீட்டு நிகழ்சிகளை சாக்குபோக்குசொல்லி தவிர்ப்பது 8. அடிக்கடி பணம் கேட்பதுபணத்தின் மதிப்பு பற்றி சற்றும் புரிந்து கொள்ளாதிருத்தல்,நண்பர்கள் போல இருக்க முயல்வதுஅவர்களை வீட்டிற்கு கூட்டி வருவது 9. வீட்டை ஒரு விருந்தினர்இல்லமாக பாவிப்பதுஎந்த உதவியோ ஒத்துழைப்போ வழங்காமல் இருப்பது 10. எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருப்பதுகழிவறைகளில் அதிக நேரம்கண்ணாடி முன் அதிக நேரம்பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பது என்று இந்தப் பட்டியல் நீளுகிறது.
இவர்களை எப்படி சமாளிக்கலாம் ?. 1. பெற்றோர் தான் சிறந்த முன் உதாரணம் என்பதால் நாம் வீட்டிலும்வெளியிலும் எப்படி நடந்து கொள்கிறோம் என்று முழுமையாக உணர்தல் அவசியம். 2. இனம் புரியாதகோபம்கெட்ட சகவாசம்கெட்ட பழக்கம்தனிமை விரும்புவது இவற்றை உற்று நோக்கி கவனித்துஅவர்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தலின் அவசியம். 3. நண்பரைப் போல் அடிக்கடி பேசி நேரம் செலவுசெய்து புரிந்து கொள்ளுதல்தொண தொணக்காதிருத்தல்அவர்கள் நட்பை மதித்தல் மிக முக்கியம். 4.எளிதில் பேசி விடும் பெண் பிள்ளைகளை விட யோசித்து அல்லது கடிந்து பேசும் ஆண் பிள்ளைகள் சற்றுகடினமானவர்கள் என்பதை மனதில் கொள்ளல் 5. மாறிக் கொண்டு இருக்கும் வானிலை போல இவர்கள்மனநிலையும் மாறும்அப்போது விவாதம் செய்யும் சூழல் வீட்டில் ஏற்படும்அத்தருணம் பொறுமைகடைபிடிக்கும் பெற்றோர் வெற்றி பெறுகிறார்கள்

 பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது என்ன ?
1. யார் நடத்தையையும் சட்டென்று மாற்ற முடியாதுசிறு வயது முதலே இருக்கும் மனப்பாங்கை தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல தீடிர் என மாற்ற முயற்சிப்பது இயலாத ஒன்று. 2. அடிக்கடி கத்துவது,கோபப்படுவதுதிட்டுவதுமிரட்டுவதுசொந்த விஷயத்தில் தலையிடுவது நல்லதல்லஅன்பிற்கும்உண்டோ அடைக்கும் தாழ்கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இவை நினைவில் இருக்கட்டும்.
3. இலக்குகள் நிர்ணயம் செய்வதில் கண்டு கொள்ளாதிருத்தல் தவறு.
4. அவர்களுக்கு இணையாக இக்கால பாடல்கள்நடிகர்கள் பற்றிய தகவல் அறிவு அவசியமில்லை எனநினைப்பதுமொபைல்முகநூல்புதிய சமையல் குறிப்புகள் பற்றி சற்றும் விருப்பம் காட்டாதிருத்தல் தவறு. 5. அவர்கள் 'அவர்கள்தான். 'நாம்அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முயற்சிக்காமை 

நமது குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள் என நம்புதல் நன்மை தரும்அவர்கள் இடத்தில நம்மைவைத்துப் பார்த்தல் நிச்சயம் நல்லதுஅவர்களைப் சந்தேகப்படாதிருத்தல்பொறுப்புகளை பகிர்ந்து அளித்துகாத்திருத்தல்வீட்டு முடிவுகளில் அவர்களை ஆலோசித்தல்அவர்களின் நவீன சிந்தனைகளைபாராட்டுதல், குறிப்பாக அவர்களின் நண்பர்களை மதித்தல் பல நேரங்களில் நல்ல உறவுமுறையைஏற்படுத்தும்

 இன்றைய பெற்றோர்கள் பழைய பஞ்சாங்கமாக இருத்தல்,  எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்தல்,தமது கனவுகளை குழந்தைகளின் மீது திணித்தல்இதர பிள்ளைகளோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தல்,ஒழுக்கம் என்ற பெயரில் மிலிடரி போல நடந்து கொள்ளுதல்வளர்ந்து விட்டார்கள் என்பதை மறந்து கைநீட்டுதல்உறவினரிடம் மற்றும் நண்பர்களிடம் குற்றப் பத்திரிகை வாசித்தல்எல்லாவற்றிற்கும் கேள்விகேட்டல்அவர்கள் முன்பு சண்டை போட்டுக் கொள்ளுதல், - இவை அனைத்தும் மாற்றிக் கொண்டு தான் ஆகவேண்டும்.

இது இரு கோடிட்ட வரிகள் என்று நினைத்துப் படிக்கவும்நம் குழந்தைகளுக்கு பிடித்த நண்பர்கள்,உடைகள்உணவு வகைகள்நடிகர்கள்நடிகைகள்டிவி சானல்கள்அவர்கள் கேட்கும் பாடல்கள்,பொழுதுபோக்குஅவர்கள் படிக்க நினைக்கும் படிப்புசெல்ல நினைக்கும் இடங்கள்புதிய திறமைகள்,கனவுகள் பற்றி எல்லாம் கேலி செய்யாது இருத்தல் இன்றைய பெற்றோரின் தலையாய செயல்பாடுஎனலாம்.

No comments:

Post a Comment