Thursday, May 12, 2016

Tamil Quotes by Balasandilyan

நாவடக்கம் இல்லா உலகம் நரகம் தான் சந்தேகம் என்ன? சொந்த வார்த்தை என்றாலும் சொன்ன வார்த்தை என்றாலும் சுடுசொல் என்றால் விரிசல் தான்..!

வலி வந்தால்
டேப்லட் நேற்று
டேப்லட் வந்ததால்
வலி இன்று

யாருடனும் பழகலாம். ஆனால், பழகும் ஒவ்வொருவரிடமிருந்தம் நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்று பார்த்தால் நல்லது.

பயம், சோர்வு, அயர்வு, வருத்தம், கோபம் எல்லாமே வரும் போகும். ஆனால் அவை நாமல்ல. நமது மனநிலை மட்டுமே. நாம் என்பது வருவதும் போவதும் அல்ல, அது நிரந்தரம்.

உங்கள் விளக்கம் நீளமான ஒன்று என்றால் அதில் பொய்யும் மிக ஆழமான ஒன்று.

கல் மண் இவற்றின் குவியல்களே மலை. நீர்த்துளிகளின் சேர்க்கையே கடல். அதுபோல நமது சொல் செயல் மற்றும் எண்ணங்களின் கலவையே வாழ்க்கை என்பது. புரிந்து கொள்வோம் மனிதனாக.

மற்றவர்கள் விரும்பிக் கேட்கும் படி பேசுவதும், பிறர் பேச்சை மனதார விரும்பிக் கேட்பதும் ஒரு கலை தான். மன்னிக்கும் முயற்சியை கையிலெடுத்து வெறுக்கும் பயிற்சியை கைவிடுவோம்.

சில நேரம் சரியான ஒரு சிறிய முடிவு பின்னால் நிகழ்ந்து இருக்கக்கூடிய பல இடர்பாடுகளிலிருந்து நம்மைக் காக்கிறது

மனதை அடக்க நினைத்தால் அது அலைபாயும், அடம் பிடிக்கும். மனதை அறிய விழைந்தால் தன் வசப்படும். படிப்படியாக அடங்கி அமைதியாகும். சத்தியமிதை சாத்தியமாக்க பயிற்சி தான் வேண்டும்

எது ஒருவனுக்கு ஆத்ம திருப்தியை ஆனந்தத்தைக் கொடுக்கிறதோ அது தான் அவனின் பாதையாக (ஸ்வதர்மா) இருக்க முடியும்.

வலிக்கும் உறவுகள் தவிர்ப்போம்
வலிமையான உறவுகளை வளர்ப்போம்

அறிகுறிகள் கேட்டே அறிவுரைகள் சொல்பவர்க்கெல்லாம் ஆயிரம் அனுபவம் இருக்கும் வலிகள் வேதனைகள் குறித்து..!

வெறுப்பு என்பது விஷம் போல. நமக்குள் அது வளர வளர அது நம்மையே அழித்து விடும். வன்மம் ஒழியட்டும். ஜன்மம் தழைக்கட்டும்.


No comments:

Post a Comment