Tuesday, June 10, 2014

A cab driver who is very positive and successful with visualization techniques

Today's appreciation:
Had to go to the Chennai Airport this morning. Booked a Fast Track cab - up and down. The moment I got in - asked for the name of the driver who said he is Senthil. After some time I saw the bulging pouch in front of my seat - I could see 3 books. Two biographies (About Ambani and another Narayanamoorthy) and another book on Subconscious mind in Tamil. I immediately became curious. Asked whether any passenger left by mistake. He quickly said that it was all his books and he has already completed reading once. He is also attending a lots of Positive thinking and Law of Attraction workshop. He was in fact successful in buying a car after attending this workshop. The one particular workshop which he planned to attend - seems to be very expensive - something like 50K for the prog. and he is not able to go for that. He mentioned that if he attended that particular one - his life would change. On my return I came by the same car along with my aged aunt who came from Ahmedabad. Our talk continued. He curiously asked about me and my profession. He clarified some of his doubts. I told him " it is because of his strong belief that he could achieve" and not just by attending the said workshop alone. I appreciated his self-esteem and ability to overcome the limiting self-belief. Amazing experience. I appreciate this 39 years old driver. Of late I am able to see a lots of proof - that - we should not 'label' any individual. Drivers are like that. Auto fellows are like that. Who said so. I wish Senthil the best on his endeavor. This world soon would become very prosperous and beautiful if we are going to have more Senthils. His mobile number is :9543962114.
வெளியூரிலிருந்து இன்று காலை விமானம் வழி வந்த என் மாமியை அழைத்து வர விமான நிலையம் சென்றேன் - கால் டாக்ஸி மூலம். ஏறி அமர்ந்ததும் டிரைவருடன் பேச்சு கொடுத்தேன். அவர் பெயர் செந்தில். வயது 39. இரண்டு பிள்ளைகள். பார்த்தால் நல்ல பழக்கம் உள்ளவர் போல் பட்டார். கண் முன் இருந்த சீட் பையில் மூன்று புத்தகம். இரண்டு அம்பானி மற்றும் நாராயணமூர்த்தி இருவரின் வெற்றி கதைகள். மற்றொன்று ஆழ் மனதின் சக்தி பற்றியது. யாராவது மறந்து வைத்துப் போய் விட்டார்களா எனக் கேட்டேன். இல்லை இவை என்னுடையவை. இது வரை ஒரு முறை படித்து முடித்து விட்டேன் என்றும் அவர் ஆழ் மனம் குறித்த பயிலரங்கங்கள் போவதாகவும் சொல்லி தனது நோட்ஸ் எடுத்த பாட் ஒன்றை காண்பித்தார். என்னைப் பற்றியும் என் பணி பற்றியும் கேட்டு முடிப்பதற்குள் விமான நிலையம் வந்து விட்டது. திரும்பி வரும் போது சம்பாஷனை தொடர்ந்தது. நெகடிவ் எண்ணங்கள் பற்றியும் பாட்டர்ன் மாற்றுவதை பற்றியும் சில பல சந்தேகங்கள் கேட்டார். தான் விஷுவலைசேஷன் பயிற்சி செய்து ஒரு கார் வாங்கிய விவரம் சொல்லி மகிழ்ந்தார். அட டிரைவர், ஆட்டோ ஓட்டுனர்கள் இப்படித் தான் எனும் நமது வழக்கமான எண்ணங்களை முறியடித்த செந்தில் எனும் அந்த இளைஞரை பாராட்டி விட்டு சின்ன டிப்ஸ் கொடுத்து வாழ்த்தி விட்டு இறங்கினேன். கையோடு ஒரு போட்டோவும் எடுத்தேன். அந்த நபரை இன்று பாராட்டி வாழ்த்துகிறேன். இவர் போல் நிறைய பேர் வர வேண்டும். சுபிட்சமான உலகம் உடனே நம்மை சுற்றி மாற வேண்டும். எல்லாம் இன்ப மயம். அவர் நம்பர் : 9543962114

Monday, June 9, 2014

Someone who fights with her life with lots of confidence

For obvious reasons - there is no photo or mention of name here.
She worked as a teacher. She used to run with enthusiasm every day morning. All her three children were married and well-settled. Her husband who consumes liquor on a daily basis in spite of a very respectable Govt job used to bring lots of embarrassment to her. Her father who was living with the family expired. Her lone younger sister suddenly expired due to heart attack leaving her family behind. She decided to rebuild her house into flats. When the flat was ready to be occupied the entire family entered the house with an ambulance van - her daughter-in-law expired due to cancer - a very young lady. Entire neighborhood was shaken up. Now for the past 9 or 10 months She herself is suffering from cancer...that too in the throat which has spread to the tongue. After surgery she lost her tongue. Her daily food now is only through tube. She has become very lean and dark, lost her charm, her hair etc. Today when I started to leave my daughter to catch her office bus - she looked at me and waived hands with a smile. I asked her through sign language about her welfare. She showed 'thums up' symbol to denote she is fine. I was very emotional to see her. I very sincerely appreciate her and pray for her peace of mind, harmony and speedy recovery if there is a way. Let HIM please guide her through 'happiness' path.
தினம் உற்சாகமாக காலையில் பள்ளிக்கூடம் ஓடி ஆசிரியர் வேலை பார்த்தார். ஓய்வு பெற்ற கணவர் தினம் மனம் ரணம் செய்வதைப் பொறுப்பார். கூடவே இருந்த தந்தை இழந்தார். கூடப் பிறந்த ஒரே தங்கை இழந்தார். தனது மூன்று பிள்ளைகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார். தனி வீட்டை பிளாட் ஆக மாற்ற முடிவெடுத்து அருமையாக கட்டினார். வீடு ரெடி ஆன அன்று ஆம்புலன்ஸ் வண்டியில் கான்செர் நோயினால் இறந்து போன தனது இளம் மருமகள் சடலத்தோடு வீடு நுழைந்தார். அக்கம் பக்கம் அதிர்ந்து போனது. இவர் பெயர் மற்றும் போட்டோ இங்கு போட வில்லை என்றாலும் - இந்த நிகழ்வு உண்மை. கடந்த 10 மாதமாக கான்செர் நோயினால் இவரே அவஸ்தை படுகிறார். மெலிந்து, கறுத்து, முடி கொட்டி இருக்கும் இவருக்கு தொண்டையில் தொடங்கி அண்மையில் ஆபரேஷன் செய்யப் பட்டு நாக்கை எடுத்து விட்டனர். ஆகாரம் குழாய் வழி தான். இன்று காலை என் மகளை பஸ் ஏற்றி விட கிளம்பும் போது சைகை மூலம் ஹலோ சொன்னார். நானும் எப்படி உள்ளீர்கள் என்று செய்கை காட்டினேன். அவர் பதிலுக்கு தம்ஸ் அப் செய்து காட்டினார். மனம் பிசைந்தது. வயிற்றுக்குள் ஏதோ சொல்ல முடியா வேதனை. அவரது அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் எல்லாவற்றிற்கும் பதில் ஆண்டவனிடம் தான் உள்ளது. எனது பாராட்டு, பிரார்த்தனை, வாழ்த்துகள் அனைத்தும் உரித்தாக்குகிறேன்.

Friday, June 6, 2014

A volunteer in the Music industry

Today's appreciation:
I am not sure if you have heard that someone is a volunteer in many forums for more than 4 decades. He can be seen when there is Seer's Darshan. You can see him when there is an Annadhanam. You can see him in all music concerts. Musicians render a great service by offering their excellent music - which is a treat to ears, soul and the mind, for some it is a medicine, for some it is their life. You may see organizers, compere, sabha secretaries, audio people, assistants during a music concert in temples or sabhas. But I have personally been seeing 'Dhaadi Shekar' - some call him 'Ice cream Shekar'. He must be 65 now. He is personally known to many musicians. Ok. What does he do? He would just do anything for the musician. Offer water, soda, milk, sometimes use handfans, pick up luggages for them, and for some musicians like M.Chandrasekaran uncle - who cannot see - would be guided to the stage or vehicle by this gentleman. He is doing all these on a self-less basis and on a voluntary basis. He also supplies food to very old people who have no one to help as a carrier by bicycle for a very nominal carrying fee - from the place where it is cooked. He can be seen with a big smile any time. He is lean. Also very clean. You may recall him when you see his photo below. You may even check about him with a top musician about him. In fact he has been serving right from Madurai Mani Iyer to the latest Abhishek or Janani etc. It is very rare to see such people in this digital era. To wish him or to contact him : Mobile - 09840888808.
கிட்டதட்ட ஒரு 40 ஆண்டுகளாக ஒருவர் தன்னார்வ சேவகராக தொண்டராக இருக்க முடியுமா? எஸ் முடியும். மடாதிபதிகள் வந்தாலும், அன்னதானம் நடைபெற்றாலும் இவரைப் பார்க்கலாம் - சேவை செய்பவராக. குறிப்பாக இவரைத் தெரியாத சங்கீத வித்வான் இருக்க முடியாது. மதுரை மணி ஐயர் தொடங்கி இப்போதுள்ள இளம் வித்வான் வரை பார்த்து பார்த்து தண்ணீர், பால், விசிறி, சோடா வழங்கி ஆத்மார்த்த சேவை செய்கின்ற இவர் பெயர் 'தாடி' சேகர். சிலர் இவரை ஐஸ் கிரீம் சேகர் என்றும் அழைப்பர். வாத்தியம், பெட்டி கூட தூக்குவார். பார்வை இழந்த சந்துரு (வயலின் வித்வான்) மாமாவை கை பிடித்து மேடைக்கு, மேடையிலிருந்து காருக்கு என்று அழைத்துப் போவார். முகத்தில் எப்போதும் சிரிப்பு. எதையும் எதிர்பாராத சேவை. எளிமை. நேர்மை. கெட்ட பழக்கங்கள் இன்மை. ஒல்லி தேகம். ஓடி ஓடி வேலை செய்யும் சுறுசுறுப்பு. எல்லாம் கலந்தது தான் சேகர். இவருக்கு வயது 65 இருக்கும். வேறு என்ன செய்கிறார் என விசாரித்தால் வயதானவர்களுக்கு வேளா வேளை சைக்கிளில் சென்று ஒரு மாமி இடம் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு சேர்க்கிறார் - அதுவும் சொற்ப தொகைக்கு. இப்படியும் ஒருவர் உண்டா? அழைத்து பாராட்ட ஆவலா? இதோ அவர் தொடர்பு எண் : 09840888808.

Mango pickle grandpa

Today's appreciation:
A person who works with commitment, interest and passion. He is most sought after by middle and old aged ladies - especially who knows to make Aavakkai pickle out of Mango. People come from long distance also to buy from him. He is seldom seen free. He cuts mango into pieces with lots of nuances and in the best way the pickle has to result in. If it the mango is your own there is a charge of 6 to 8 rupees per mango. If you buy from him the cutting charges are free. He would do this job very accurately with precision as he has been doing this for over 5 decades or perhaps from his childhood. He does not want to reveal his native place. He does not know his age. but only his name - it is Rajagopal. I had to beg him to take a picture. He is very reserved. Speaks almost nil. But when it comes to his job - he is immaculate. You want to meet this guy - then you must - before the season gets over - he is there in a street corner near uduppi hotel on the Mambalam Station Road opp to a famous stationary shop. In the present era - many buy readymade things. But there are still a few who make with their own hands with the right recipe. This person helps you to make your best pickle at home. He hands over the cut mango pieces only after praying for you and your welfare. Rare things are available only at rare places. We need to spare time to search for it. I appreciate this old man today. Hope you will also....He does not have a mobile - otherwise it would have been given here.
பெயர் மட்டும் தான் தெரியும். வயது தெரியாது. ஊர் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. சோர்வு தெரியாது. உற்சாகம் தெரியும்..50 ஆண்டுகளுக்கும் மேல் இந்த பணியை செய்து வரும் இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். போட்டோ எடுக்க எனக்கு சம்மதம் தரவே இல்லை. கெஞ்சிக் கூத்தாடி தான் எடுத்தேன். வக்கனையாய் சாப்பிடுவோர், அக்கறையாய் பரிமாறுவோர் இவர்களுக்கு பக்குவமாய் சில விஷயங்கள் தெரியாது. அதனால் இன்று கடவுளுக்கு படைக்க கூட கடையில் வாங்கி விடுகிறார்கள். இந்த ராஜகோபால் தாத்தா பல ஆண்டுகளாக மேற்கு  மாம்பலம் ஸ்டேஷன் சாலையில் உடுப்பி ஹோட்டல் அருகே ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு ஒரு விஷயம் செய்கிறார். இவர் சும்மா இருக்கும் நேரம் மிகக் குறைவு. இவரைத் தேடி பல இடங்களில் இருந்து வருகிறார்கள் - குறிப்பாக பெண்கள்....எதற்கு தெரியுமா? ஆவக்காய் ஊறுகாய் செய்ய  மாங்காய் வாங்கவும் அதனை பாங்காய் பக்குவமாய் கொட்டை ஓட்டோடு நறுக்கி வெட்டிச் செல்லவும் ....! அவரிடம் மாங்காய் வாங்கினால் வெட்டுக் கூலி கிடையாது. நம் வீட்டு மாங்காய் என்றால் ஒரு மாங்காய்க்கு 6 முதல் 8 ரூபாய் வரை வாங்குவார். கொடுக்கும் போது கடவுளை வேண்டி விட்டு தருவார். அந்த வீட்டு ஊறுகாய் ருசியாக சரியாக பக்குவமாக வர வேண்டும் என்று. என்ன இவரைப் பார்க்க தோன்றுகிறதா? மாங்காய் சீசன் முடிவதற்குள் போய் விடுங்கள்.

Wednesday, June 4, 2014

A Granny willing to serve always with a smile

 This is Pichamaal Patti (Sevai Arasi) who is above 70 by age. But well with in 40 as regards her activities and services. She has retired from State Govt - Education Dept - as Aanganwaadi Trainer (Paalwaadi Trainer). She writes, sings, tells stories. She just can't keep quiet. She calls personally and wishes more than 800 people in a year on their birthday and wedding days. She goes to orphanages such as New Life in Eraiyoor and Sevalaya in Thirumullaivoyil to train the children with rhymes and dance. She serves them food as well. She visits Corporation Schools periodically to motivate children - all on a voluntary basis. She finishes her domestic responsibilities in the morning including food/medicine arrangements for her aged husband. She has three sons - yet she lives her life free with her pension. She acts at times in short films. She helps her friends on their family functions. She knows only to serve and help and also to smile. She does not know to complain or gossip. She also visits temples for 'cleaning jobs' there. I feel very happy in appreciating her in this page. If you want to call and appreciate her, this is her mobile no: 09445428163.

பார்த்தால் வயது 70க்கும் மேல். பழகினால் 40. இவர் செயல்பாடு அப்படி. ஆண்டுக்கு கிட்டதட்ட 800 பேருக்கு தொலைபேசி மூலம் தினமும் அழைத்து பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிப்பார். கோவில்களில் உழவாரப்பணி. அரசுப் பணியில் இருந்து (பால்வாடி பயிற்சியாளர்) ஓய்வு பெற்றவர். சேவை அரசி என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர். வாரம் ஒருமுறை எறையூரில் உள்ள நியூ லைப் காப்பகம், திருமுல்லைவாயிலில் உள்ள சேவாலயா காப்பகம் இங்கெல்லாம் சென்று இளம் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம், கதை சொல்லித் தருவார். அவர்களோடு விளையாடுவார். சாப்பாடு பரிமாறுவார். எல்லாமே வீட்டு பொறுப்புகளை முடித்த பிறகு தான். 3 பிள்ளைகள் இருந்தாலும் சொந்தக் காலில் நிற்கிறார். தனது வயதான கணவனுக்கு பணிவிடை செய்கிறார். வம்பு பேச மாட்டார். புகார் சொல்ல மாட்டார். புன்னகை என்றும் மாறாது இவர் முகத்தில். தெரிந்தவர், நண்பர், உறவினர் யார் வீட்டில் நல்லது என்றாலும் வலியப் போய் உதவுகிறார். குறும்படங்களில் நடிக்கிறார். சொந்தமாக கவிதை, பாடல் எழுதுகிறார். அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். எப்படி பாராட்டுவது இவரை....! நீங்களும் கூட அழைத்துப் பாராட்டலாம் ....அணுகுக பிச்சம்மாள் பாட்டி : 09445428163.

Monday, June 2, 2014

A pharmacist with a difference

Today's appreciation:
Mr. Sivaraj, a young partner of a pharmacy - also has a Trust viz. New Sun Flower Trust for the past 7 years. He conducts medical camps and dental camps periodically in different areas envisaged to help poor and downtrodden. Conducting Drawing competition for Corporation school children, Kolam (rangoli) competition for women in the local area during December every year. He has donated blood more than 50 times. In his medical shop - every day in the morning - he charges only Rs. 10/- for Blood sugar test for senior citizen (instead of Rs. 30/-) between 6.30 and 8.30 am. He also arranges Nurse or Doctor on call as a service for house visits to help patients who are bed-ridden. He also offers medicines at special rate for kidney and cancer drugs. Change - it has to be brought by every person as a personal initiative. He also issues free evening newspapers to his customers till the stock gets over. He keeps drinking water can for public during summer. He certainly needs honest appreciation for various humane and selfless service being rendered by him. He can be reached in 08144710413. His shop is Arya Gowda Road, West Mambalam and the name is Nellai Pharmacy.
மருந்து கடையில் மருந்து கிடைக்கும். இதர உதவிகள் மருந்துக்கு கூட கிடைக்காது. ஆனால் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்ய கௌடா சாலையில் உள்ள நெல்லை பார்மசி நடத்தும் இரு சகோதர்களில் இளையவராக இருக்கும் திரு சிவராஜ் இன்று பாராட்டுக்கு உரியவராகிறார். நியூ சன் ப்ளோவேர் டிரஸ்ட் - 7 ஆண்டுகளுக்கு முன்பி நிறுவி அதன் மூலம் மருத்துவ முகாம் (ஏழை மக்கள் பயன் பெற), பல் மருத்துவ முகாம், அரசு பள்ளி பிள்ளைகளுக்கு வரைதல் போட்டி, பெண்களுக்கு கோலப் போட்டி, வெயில் காலங்களில் வருவோர் போவோருக்கு இலவச குடிநீர், மாலையில் வரும் கஸ்டமர்களுக்கு இலவச நியூஸ் பேப்பர் இவை அனைத்தும் வழங்குகிறார். அது மட்டுமா இவரே 50க்கும் மேற்பட்ட முறை இரத்த தானம் செய்துள்ளார். காலை நேரத்தில் கடையை சீக்கிரம் திறந்து 6.30 முதல் 8.30 மணி வரை முதியவர்களுக்கு சுகர் டெஸ்ட் 10 ரூபாய்க்கு செய்து தருகிறார். கிட்னி மற்றும் கான்செர் நோயாளிகளுக்கு மருந்து விலையில் சிறப்பு தள்ளுபடி தருகிறார். படுத்த படுக்கையாக இருக்கும் அக்கம் பக்க வயதான நோயாளிகள் பயன் பெற வீடு வந்து மருத்துவம் பார்க்க டாக்டர் மற்றும் நர்ஸ் ஏற்பாடு செய்வதில் உதவுகிறார். எல்லாமே வியாபாரம், சுயநலம் ஆகி விட்ட இந்த காலத்திலும் ஒரு சிலர் சிவராஜ் போல இருப்பதால் தான் அவ்வப்போது மழை பெய்கிறது. வாழ்க இவர். வளர்க இவர் சேவை. பாராட்ட அல்லது இவர் உதவி தேவை என்றால் அணுகுக :08144710413

Sunday, June 1, 2014

78 years Old Woman still earns her own bread

Today's Appreciation:
This is Saroja Patti. She is the mother of 6 children. Her elder son died and other 5 are settled and living separately. Patti lives with her elder son's wife. She is now 78. She starts her work around 7 am in the morning. She goes door to door to sell Pappad and other home made products. She comes to our house periodically to sell her products. We always receive her with complete respect and some time my wife will offer her something to drink. Many a times we have wondered as to how at this age she is just on her own and works hard. There could be many like her. Yet I would like to appreciate this Patti today for her smiling nature. She does not do any gossip. She would never murmur about her poverty or her inability. Also she would not beg for a sale. The kind of self-esteem that she maintains at this age is amazing. I wish and pray that she comes out of her trouble at the earliest. She can be contacted for buying Appalam etc by calling her at 9962123745. You may even call her wish her for her dignity foundation in the mind.
அப்பளம் வடம் ஊறுகாய் வத்தல் இல்லாமல் சிலருக்கு சாப்பாடு இறங்காது. இப்போது இருக்கும் நிறைய பெண்களுக்கு அப்பளம் வடம் செய்ய தெரியாது. அல்லது செய்ய நேரம் இருப்பதில்லை. ஒரு பையை காலை 7 மணிக்கே தூக்கிக் கொண்டு கிளம்பிடும் இந்த சரோஜா பாட்டி தனது சுய கௌரவத்தை ஒரு நாளும் விட்டுத் தருவதில்லை. தனது சிக்கல்களை யாராவது கேட்டால் தவிர புலம்பி சொல்லுவதில்லை. வம்பு பேசுவதில்லை. வீடு வீடாக சென்று வியாபாரம் செய்யும் இவருக்கு வயது 78.  ஆறு குழந்தைகள் பெற்ற இவருடைய மூத்த மகன் இறந்து விட்டார். கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவனை இழந்த தனது மூத்த மருமகளுடன் வாழும் இவர் எங்கள் இல்லம் அவ்வப்போது வந்து அப்பளம் வடம் வியாபாரம் செய்வது உண்டு. இவரது கடின உழைப்பு, சார்பு இல்லா வாழ்வு, கடவுள் பக்தி, வம்பு பேசாதிருத்தல் அத்தனை குணங்களும் கண்டு நான் வியந்து போவதுண்டு. இவர் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். இவரது கஷ்டங்கள் விரைவில் தீர வேண்டும்.
இவரைத் தொடர்பு கொண்டு அப்பளம் வடம் வாங்க அல்லது வாழ்த்து தெரிவிக்க இவரது தொடர்பு எண் : 9962123745.