Wednesday, June 4, 2014

A Granny willing to serve always with a smile

 This is Pichamaal Patti (Sevai Arasi) who is above 70 by age. But well with in 40 as regards her activities and services. She has retired from State Govt - Education Dept - as Aanganwaadi Trainer (Paalwaadi Trainer). She writes, sings, tells stories. She just can't keep quiet. She calls personally and wishes more than 800 people in a year on their birthday and wedding days. She goes to orphanages such as New Life in Eraiyoor and Sevalaya in Thirumullaivoyil to train the children with rhymes and dance. She serves them food as well. She visits Corporation Schools periodically to motivate children - all on a voluntary basis. She finishes her domestic responsibilities in the morning including food/medicine arrangements for her aged husband. She has three sons - yet she lives her life free with her pension. She acts at times in short films. She helps her friends on their family functions. She knows only to serve and help and also to smile. She does not know to complain or gossip. She also visits temples for 'cleaning jobs' there. I feel very happy in appreciating her in this page. If you want to call and appreciate her, this is her mobile no: 09445428163.

பார்த்தால் வயது 70க்கும் மேல். பழகினால் 40. இவர் செயல்பாடு அப்படி. ஆண்டுக்கு கிட்டதட்ட 800 பேருக்கு தொலைபேசி மூலம் தினமும் அழைத்து பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து தெரிவிப்பார். கோவில்களில் உழவாரப்பணி. அரசுப் பணியில் இருந்து (பால்வாடி பயிற்சியாளர்) ஓய்வு பெற்றவர். சேவை அரசி என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர். வாரம் ஒருமுறை எறையூரில் உள்ள நியூ லைப் காப்பகம், திருமுல்லைவாயிலில் உள்ள சேவாலயா காப்பகம் இங்கெல்லாம் சென்று இளம் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம், கதை சொல்லித் தருவார். அவர்களோடு விளையாடுவார். சாப்பாடு பரிமாறுவார். எல்லாமே வீட்டு பொறுப்புகளை முடித்த பிறகு தான். 3 பிள்ளைகள் இருந்தாலும் சொந்தக் காலில் நிற்கிறார். தனது வயதான கணவனுக்கு பணிவிடை செய்கிறார். வம்பு பேச மாட்டார். புகார் சொல்ல மாட்டார். புன்னகை என்றும் மாறாது இவர் முகத்தில். தெரிந்தவர், நண்பர், உறவினர் யார் வீட்டில் நல்லது என்றாலும் வலியப் போய் உதவுகிறார். குறும்படங்களில் நடிக்கிறார். சொந்தமாக கவிதை, பாடல் எழுதுகிறார். அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். எப்படி பாராட்டுவது இவரை....! நீங்களும் கூட அழைத்துப் பாராட்டலாம் ....அணுகுக பிச்சம்மாள் பாட்டி : 09445428163.

No comments:

Post a Comment