Monday, June 9, 2014

Someone who fights with her life with lots of confidence

For obvious reasons - there is no photo or mention of name here.
She worked as a teacher. She used to run with enthusiasm every day morning. All her three children were married and well-settled. Her husband who consumes liquor on a daily basis in spite of a very respectable Govt job used to bring lots of embarrassment to her. Her father who was living with the family expired. Her lone younger sister suddenly expired due to heart attack leaving her family behind. She decided to rebuild her house into flats. When the flat was ready to be occupied the entire family entered the house with an ambulance van - her daughter-in-law expired due to cancer - a very young lady. Entire neighborhood was shaken up. Now for the past 9 or 10 months She herself is suffering from cancer...that too in the throat which has spread to the tongue. After surgery she lost her tongue. Her daily food now is only through tube. She has become very lean and dark, lost her charm, her hair etc. Today when I started to leave my daughter to catch her office bus - she looked at me and waived hands with a smile. I asked her through sign language about her welfare. She showed 'thums up' symbol to denote she is fine. I was very emotional to see her. I very sincerely appreciate her and pray for her peace of mind, harmony and speedy recovery if there is a way. Let HIM please guide her through 'happiness' path.
தினம் உற்சாகமாக காலையில் பள்ளிக்கூடம் ஓடி ஆசிரியர் வேலை பார்த்தார். ஓய்வு பெற்ற கணவர் தினம் மனம் ரணம் செய்வதைப் பொறுப்பார். கூடவே இருந்த தந்தை இழந்தார். கூடப் பிறந்த ஒரே தங்கை இழந்தார். தனது மூன்று பிள்ளைகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார். தனி வீட்டை பிளாட் ஆக மாற்ற முடிவெடுத்து அருமையாக கட்டினார். வீடு ரெடி ஆன அன்று ஆம்புலன்ஸ் வண்டியில் கான்செர் நோயினால் இறந்து போன தனது இளம் மருமகள் சடலத்தோடு வீடு நுழைந்தார். அக்கம் பக்கம் அதிர்ந்து போனது. இவர் பெயர் மற்றும் போட்டோ இங்கு போட வில்லை என்றாலும் - இந்த நிகழ்வு உண்மை. கடந்த 10 மாதமாக கான்செர் நோயினால் இவரே அவஸ்தை படுகிறார். மெலிந்து, கறுத்து, முடி கொட்டி இருக்கும் இவருக்கு தொண்டையில் தொடங்கி அண்மையில் ஆபரேஷன் செய்யப் பட்டு நாக்கை எடுத்து விட்டனர். ஆகாரம் குழாய் வழி தான். இன்று காலை என் மகளை பஸ் ஏற்றி விட கிளம்பும் போது சைகை மூலம் ஹலோ சொன்னார். நானும் எப்படி உள்ளீர்கள் என்று செய்கை காட்டினேன். அவர் பதிலுக்கு தம்ஸ் அப் செய்து காட்டினார். மனம் பிசைந்தது. வயிற்றுக்குள் ஏதோ சொல்ல முடியா வேதனை. அவரது அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் எல்லாவற்றிற்கும் பதில் ஆண்டவனிடம் தான் உள்ளது. எனது பாராட்டு, பிரார்த்தனை, வாழ்த்துகள் அனைத்தும் உரித்தாக்குகிறேன்.

No comments:

Post a Comment