Friday, June 6, 2014

Mango pickle grandpa

Today's appreciation:
A person who works with commitment, interest and passion. He is most sought after by middle and old aged ladies - especially who knows to make Aavakkai pickle out of Mango. People come from long distance also to buy from him. He is seldom seen free. He cuts mango into pieces with lots of nuances and in the best way the pickle has to result in. If it the mango is your own there is a charge of 6 to 8 rupees per mango. If you buy from him the cutting charges are free. He would do this job very accurately with precision as he has been doing this for over 5 decades or perhaps from his childhood. He does not want to reveal his native place. He does not know his age. but only his name - it is Rajagopal. I had to beg him to take a picture. He is very reserved. Speaks almost nil. But when it comes to his job - he is immaculate. You want to meet this guy - then you must - before the season gets over - he is there in a street corner near uduppi hotel on the Mambalam Station Road opp to a famous stationary shop. In the present era - many buy readymade things. But there are still a few who make with their own hands with the right recipe. This person helps you to make your best pickle at home. He hands over the cut mango pieces only after praying for you and your welfare. Rare things are available only at rare places. We need to spare time to search for it. I appreciate this old man today. Hope you will also....He does not have a mobile - otherwise it would have been given here.
பெயர் மட்டும் தான் தெரியும். வயது தெரியாது. ஊர் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. சோர்வு தெரியாது. உற்சாகம் தெரியும்..50 ஆண்டுகளுக்கும் மேல் இந்த பணியை செய்து வரும் இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். போட்டோ எடுக்க எனக்கு சம்மதம் தரவே இல்லை. கெஞ்சிக் கூத்தாடி தான் எடுத்தேன். வக்கனையாய் சாப்பிடுவோர், அக்கறையாய் பரிமாறுவோர் இவர்களுக்கு பக்குவமாய் சில விஷயங்கள் தெரியாது. அதனால் இன்று கடவுளுக்கு படைக்க கூட கடையில் வாங்கி விடுகிறார்கள். இந்த ராஜகோபால் தாத்தா பல ஆண்டுகளாக மேற்கு  மாம்பலம் ஸ்டேஷன் சாலையில் உடுப்பி ஹோட்டல் அருகே ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு ஒரு விஷயம் செய்கிறார். இவர் சும்மா இருக்கும் நேரம் மிகக் குறைவு. இவரைத் தேடி பல இடங்களில் இருந்து வருகிறார்கள் - குறிப்பாக பெண்கள்....எதற்கு தெரியுமா? ஆவக்காய் ஊறுகாய் செய்ய  மாங்காய் வாங்கவும் அதனை பாங்காய் பக்குவமாய் கொட்டை ஓட்டோடு நறுக்கி வெட்டிச் செல்லவும் ....! அவரிடம் மாங்காய் வாங்கினால் வெட்டுக் கூலி கிடையாது. நம் வீட்டு மாங்காய் என்றால் ஒரு மாங்காய்க்கு 6 முதல் 8 ரூபாய் வரை வாங்குவார். கொடுக்கும் போது கடவுளை வேண்டி விட்டு தருவார். அந்த வீட்டு ஊறுகாய் ருசியாக சரியாக பக்குவமாக வர வேண்டும் என்று. என்ன இவரைப் பார்க்க தோன்றுகிறதா? மாங்காய் சீசன் முடிவதற்குள் போய் விடுங்கள்.

No comments:

Post a Comment