Monday, July 21, 2025

Punnagaiyaal Manam vendriduvaal - my video song

 https://youtu.be/obu0qHyz5zM?si=z8vbhmjV3lPIceJf

எனது பாடல் ஏஐ இசையில்
ஏற்பாடு: Umakanth Thamizkumaran Thank you🙏🌹 ji
மின்கைத்தடி அமைப்புக்கு நன்றி🙏💕

புன்னகையால் மனம் வென்றிடுவாள் - ஒரு
கண்ணசைவில் அன்பைத் தந்திடுவாள்
தன்னிகரில்லா கனிவைச் சுரந்து - நல்ல
தாயவளென்று உணர்த்திடுவாள் (புன்னகை)
ஆனந்தம் தான் அவள் மடியினிலே - புது
அன்புமழை அவள் வடிவினிலே
ஆரம்பமே அவள் உறவினிலே - என்
அகிலமே ஆனவள் உருவினிலே (புன்னகை)
தன்னையே உருக்கிடும் தியாகியவள் - என்றும்
தன்னலம் அறியா யோகியவள்
தாயெனும் இலக்கணமாய் ஆகியவள் - வாழ்வின்
தனிப்பெருங் கவிதையாய் மாறியவள்
- பாலசாண்டில்யன்

Ek baar dekh lijiye in Tamil

 Heeramandi எனும் டெலிசீரியலில் வரும் Ek baar dekh lijiye பாடலை தமிழில் சேர்க்கும் முயற்சி. இது சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் இசை. கல்பனா கந்தர்வா அவர்களின் காந்தக் குரலில்....:

ஒருமுறை என்னைப் பாரடி பெண்ணே - அந்த
ஒரு பார்வை தானே யாசிக்கிறேன்.கண்ணே - உன்
அன்பினை வழங்கி என்னைப் பித்தனாக்கு
அந்தவொரு பார்வை தந்து என்னைச் சித்தனாக்கு
உன் வெளிச்சத் தீயை வந்து சேரும் விட்டில்
பூச்சியாக்கு....விரகம் தீரக் கலப்பேன் உதட்டில்
ஒரே ஒரு பார்வை தான் எனக்குத் தேவையே
எழக்கூட முடியாத மயக்கத்தில் நான் பாவையே
என்னைத் தொலைத்து உன்னில் கலந்த
என்னால் வேறெதையும் காண முடியவில்லை
மயக்கும் அந்த விழிகளின் ஒரேயொரு பார்வையால்
மதியிழந்த என்னை எளிதில் அடிமையாக்கு
உருக்கும் உனது ஒரு பார்வை வேண்டும் பெண்ணே
உனைத்தவிர வேறெங்கும் பாராதுயென் கண்ணே
அகிலத்தில் இருந்து என்னை நீ அந்நியனாக்கு
ஆயிரம் முத்தம் தந்து வாழ்வை ஆனந்தமயமாக்கு
- பாலசாண்டில்யன்

Tamil ghazal

 aji rooth kar ab kahaan jaaiyega

jahaan jaaiyega humein paaiyega
சரியான மெலோடி
என்னிடம் ஊடல் கொண்டு எங்கே செல்வீர்
எங்கே சென்றாலும் அங்கே எனைக் காண்பீர்
கண்களில் இருந்து தப்பித்தாலும் மனமறியும்
நினைவிலிருந்து மறைந்தாலும் காண்பீர்
லட்சம் திரைச்சீலை மறைத்தாலும்
கண்டு கொள்ளலாம் கண்டு கொள்ளலாம்
மனதில் உள்ளதை இதழில் கொணர்வது கடினம்
மனதில் அதை மறைப்பது அதைவிடக் கடினம்
விழிகளின் பார்வை மனதை அறியும்
விழித்து எழுந்து மனம் மேலும் விரும்பும்..
தமிழில் முயற்சி:
பாலசாண்டில்யன்

(Yeh dil bhi ithna pahal hai - inspiration)

 முட்டாள் மனது ரொம்ப

முட்டாள் மனது - எத்தனை
முட்டிக் கொண்டாலும்
உன்னை ஏற்றும் இறக்கும்
முட்டி மோதி மீண்டும்
உன்னை அதில் ஏற்றும்
முனகி ஓடிடும் உன்னை என் மனம்
தாங்கிச் சுமக்க
முட்டாள் மனம் அது வீணாய் தினம்
ஏங்கித் தவிக்க ....!
எங்கே நீ போனாலும் என் மனம்
அங்கே தான் புரியுமா ?
என் பேச்சை அது கேட்காது
உனக்கது சற்றும் தெரியுமா ?
மனமெனும் வாகனம் பயணம்
போக வீதி எங்கே உண்டு ?
மனதை கட்டி வைக்க ஒரு விதி தான்
எங்கே உண்டு ? (முட்டாள்)
நிற்காது நீ போ எனக்குக் கவலையில்லை ஏனோ
நிற்கும் என் மனம் ஓடும் புது தூங்காவனம் தானோ
நிழல் தான் உனது எந்தன் மனது முட்டாள் மனது
நீங்காது அது உனை விட்டு சிறிது ஒரு பொழுது (முட்டாள்)
உன் மனம் வேறு என் மனம்
வேறு புரியா ததற்கு
உன்னுள் உறைவது எந்தன்
நினைவு தெரியா ததற்கு
உயிரே இரண்டு என்றாலும்
மனங்கள் இணைந்த ஒன்று
உனக்குள் இருக்கும் என்னைச்
சுமக்கும் காதல் தினம் தின்று (முட்டாள்)
- டாக்டர் பாலசாண்டில்யன்
(Yeh dil bhi ithna pahal hai - inspiration)

Baba song written by me

 https://youtu.be/qfode0q0mo8?si=o4kKlkoeUyT0wHoy

Sung by T S Ranganathan of Giri /Surang
Lyrics by Balasubramanian Kalyanaraman Balasandilyan
Original by Anup Jalota in Hindi

Aap ko dekh kar dektha raha gaya....

 Aap ko dekh kar dektha raha gaya....

Excellent number by Jagjit Singh.
உனைப் பார்த்து
உனைப் பார்த்தபடி நின்றேன்
என் சொல்ல அட மேலும்
சொல்ல வார்த்தையின்றி
வாயடைத்து நின்றேன் (உனை)
நான் வருகையில் என் பெயர்
தான் இருந்தது காற்றில்
என் பெயர் இருந்தது காற்றில்
அவள் உதட்டினில் கள்ளமும்
கபடமும் கலந்து தான் இருந்தது (உனை)
என் முன்னால் என் முன்னால்
அவள் கடந்து சென்றாள்
அவள் கடந்து சென்ற பாதையை
நான் பார்த்தபடி நின்றேன் (உனை)
பொய்யர்கள் பொய்யுரைத்து
முன்னேறிக் கொண்டிருக்கையில்
மெய்யுரைத்த நானோ உண்மை
சொல்லிப் பின்தங்கி நின்றேன் (உனை)
புயலின் வருகையே இருள்
பரப்பத் தானே
பெண் மின்னல் ஒளியாய் நின்றாளே
நான் வருகையில் என்
பெயர் காற்றில் இருந்தது
அவள் உதட்டினில் கள்ளம்
கபடமே இருந்தது (உனை)
தமிழில்: பாலசாண்டில்யன்
(Kindly excuse me for not bringing the same mood and tone)

my song

 https://www.youtube.com/watch?v=pen3X4BmgHI