Monday, July 21, 2025

Ek baar dekh lijiye in Tamil

 Heeramandi எனும் டெலிசீரியலில் வரும் Ek baar dekh lijiye பாடலை தமிழில் சேர்க்கும் முயற்சி. இது சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் இசை. கல்பனா கந்தர்வா அவர்களின் காந்தக் குரலில்....:

ஒருமுறை என்னைப் பாரடி பெண்ணே - அந்த
ஒரு பார்வை தானே யாசிக்கிறேன்.கண்ணே - உன்
அன்பினை வழங்கி என்னைப் பித்தனாக்கு
அந்தவொரு பார்வை தந்து என்னைச் சித்தனாக்கு
உன் வெளிச்சத் தீயை வந்து சேரும் விட்டில்
பூச்சியாக்கு....விரகம் தீரக் கலப்பேன் உதட்டில்
ஒரே ஒரு பார்வை தான் எனக்குத் தேவையே
எழக்கூட முடியாத மயக்கத்தில் நான் பாவையே
என்னைத் தொலைத்து உன்னில் கலந்த
என்னால் வேறெதையும் காண முடியவில்லை
மயக்கும் அந்த விழிகளின் ஒரேயொரு பார்வையால்
மதியிழந்த என்னை எளிதில் அடிமையாக்கு
உருக்கும் உனது ஒரு பார்வை வேண்டும் பெண்ணே
உனைத்தவிர வேறெங்கும் பாராதுயென் கண்ணே
அகிலத்தில் இருந்து என்னை நீ அந்நியனாக்கு
ஆயிரம் முத்தம் தந்து வாழ்வை ஆனந்தமயமாக்கு
- பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment