Wednesday, July 20, 2022

வீட்ல விசேஷம்

 வீட்ல விசேஷம் 


ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, லலிதா, சீமா, ஜார்ஜ்  மற்றும் பலர் நடித்துள்ள ஒரு பேமிலி டிராமா (மெலோ காமெடி) பார்த்து முடித்த பொழுது நிச்சயம் மனம் நிறைவு ஏற்பட்டது.

எல் கே ஜி, மூக்குத்தி அம்மன் என்ற இரண்டு படங்களுக்குப் பிறகு 'போனி கபூர்' போன்ற பெரிய தயாரிப்பாளர் ஆதரவோடு ஆர் ஜே பாலாஜி இயக்கி வசனம் எழுதி நடித்துள்ள படம் இது. அட இந்த இளைஞருக்கு இவ்வளவு திறமையா?

படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் எப்படி சிறப்பாக நடிக்க முடியும்? ஆச்சரியம் ஆனால் உண்மை. அதுவும் தேவையான சற்றும் மிகையில்லாத நடிப்பு. அறுபதிலும் காதல் வரும் என்ற பழைய பாடல் வரிகளை ஒட்டி இங்கே திருமண வயதில் ஒரு பையன் இருக்கும் பொழுது பெற்றோர் இன்னொரு பிள்ளை பெறுகிற சூழல். வீட்டில் உள்ளவர், அக்கம்பக்கம், உறவினர் எல்லோரும் அதனை எப்படி பார்க்கிறார்கள், பிறகு ஏற்கிறார்கள் என்பது தான் கதை.

முதிர்ச்சியான அர்த்தம் பொதிந்த வசனங்கள், (கண் பார்வையற்ற) திரு ஜெயராமன் அவர்கள் பாடியுள்ள - நூறு தெய்வம் தேவை இல்லை பாடல் நம்மை விடாமல் முணுமுணுக்க வைக்கிறது. இவர் ஏற்கனவே 'மூக்குத்தி அம்மன்' படத்திலும் அருமையான பாடல் ஒன்றை பாடியுள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நல்ல இசை விருந்து படைத்திருக்கிறார்.

'பதாய் ஹோ' என்ற தேசிய விருது பெற்ற ஹிந்தி படத்தின் ரீமேக். ஏற்கனவே வெற்றி பெற்ற மீண்டும் உருவாக்குவது (அதிலும் தமிழ் ஆடியன்ஸ்க்கு ஏற்ப உருவாக்குவது மிகவும் கடினம். அந்த சவாலில் பிரமாதமாக ஜெயித்திருப்பது ஆர் ஜே பாலாஜி அவர்கள். அப்படியே ஒரிஜினல் போல இல்லை என்ற கமெண்ட் இங்கே வந்தாலும், ஆர் ஜே வின் வெர்ஷன் மிகவும் சிறப்பு. சிரிப்பு. குடும்பத்தோடு அமர்ந்து நெளியாமல் தயங்காமல் பார்க்கலாம். 

நான் மிகவும் நயந்து வியந்து பாராட்டுவது சத்யராஜ், ஊர்வசி, லலிதா பாட்டி மற்றும் ஆர் ஜே அவர்களின் சிறப்பான நடிப்பை. நீங்களும் கண்டு மகிழுங்கள். 

No comments:

Post a Comment