Saturday, July 9, 2022

Puthiya Paadal

 (இசை சேர்க்கலாம்)

பல்லவி:
உறக்கம் வராமல் போனதென்ன
காரணம் என் ஸ்வாமிக்கு ! (உறக்கம்)
அனுபல்லவி:
இறுக்கம் தரும் மனகிலேசங்களில்
இன்னும் இன்னும் மூழ்கினீரோ என்ன?
(உறக்கம்)
சரணம்:
சுருக்கம் உம் பேச்சில் சரி நெற்றியில் ஏனது இருக்கும்
சுகமான தொரு கீதம் வருடிட வருமோ சற்று மயக்கம்
வருத்தம் இனி வேண்டாம் எமதன்பே சொல் என்ன தயக்கம்
நெருக்கம் நெஞ்சின் நெருக்கம் நேயத்தையே மெல்ல உரைக்கும்
(உறக்கம்)

No comments:

Post a Comment