Tuesday, July 19, 2022

தோழன்

 

தோழன்

உயிர் காப்பான் தோழன் 

உடன் இருந்து கவுப்பவன் அல்ல 

எதுவும் எதிர்பாராதவன் தோழன் 

எதிரி போல பார்ப்பவன் அல்ல 

இடர் வரின் இறைபோல் ஒரு தோழன் 

இடையூறு என நினைப்பவன் அல்ல 

தனக்கெனப்  பாராதவன் தோழன் 

தனதே எல்லாம் என்பவன் அல்ல 

மூழ்கினாலும் மூச்சாவது தோழன் 

மூச்சடைக்க வைப்பவன் அல்ல 

முன்னால் பேசுபவன் தோழன் 

முதுகில் எழுதுபவன் அல்ல 

எப்போதும் ஒரே மாதிரி தோழன் 

எதிர்பாராததை செய்பவன் அல்ல 

சகோதரனை விட ஒருபடி மேல் தோழன் 

சட்டென்று கழட்டி விடுபவன் அல்ல 

தோழன் இருந்தால் தோணி வேண்டாம் 

தொடலாம் கடலின் அந்தக் கரை - அக்கறை 

காசி வேண்டாம் பாவம் போக நல்ல தோழன் இருந்தால் 

காசு பார்ப்பதே புண்ணியம் என்றால்  தொழலாம் அவன் திசை.

No comments:

Post a Comment