Thursday, September 27, 2012

வாழ்வில் சிறக்க ஆடு மாடு
கொடுத்தால் மக்கள்
வாய்க்கு ருசியாக்கி மகிழ்கிறார்கள்
கல்வி சிறக்க கணினி
கொடுத்தால் மக்கள்
கடையில் விற்று காசாக்குகிறார்கள்
தூக்கி விட நினைப்பவர் ஒரு புறம்
தூக்கிலிட்டு கொள்ள நினைப்பவர் மறு புறம்
ஏற்றம் தர முடியுமா எளியவர்களுக்கு ....!
மாற்றம் தர முடியுமா மக்களுக்கு ....!
- டாக்டர். பாலசாண்டில்யன்


அழகானவர்களை காதலிக்காதீர்கள்
அப்படி காதலித்து அவர்கள்
உங்களுக்கு நோ சொன்னாலும்
அவர்களை கொல்லாதீர்கள்
உங்களையும் தண்டித்து கொள்ளாதீர்கள் !
காதல் நிரந்தரமானது
சாகாது.....உங்கள் நெஞ்சில் அது வாழும் ...இது நிச்சயம் !


இன்பம் என்பது
போராட்டத்திலும்
செயல்பாட்டு முயற்சியிலும்
இடையில் வரும் இடர்பாடுகளிலும் கூட
இருக்கிறது...
வெற்றியில் மட்டுமல்ல...!
- டாக்டர் பாலசாண்டில்யன்


  எதிர்பாராத சூழலை தினம்
நாம் சந்திக்கிறோம் என்றால்
சரியான பாதையில்
எதிர்பார்த்ததை விட
வேகமாக பயணிக்கிறோம்
என்று கொள்ளலாம் ...!


 பொறுமையும் தாழ்மையும்
நமது பலவீனமல்ல
அவை நமது உள்மனதின்
பலத்தை எடுத்துரைக்கிறது
-டாக்டர் பாலசாண்டில்யன்


 வருங்காலம் என்பது நிர்ணயிக்க முடியாதது
ஆனால்
நமது நாளைகளை சிறப்பாக 'அவன்'
நிர்ணயித்து விட்டான்
எனவே
'அவனை நாம் இன்று நம்புவோம் ...!

No comments:

Post a Comment