Thursday, September 27, 2012

great moral

ஒரு தாத்தா தன் பேரனிடம் ஒரு அருமையான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
"நமது மனதில் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன . அதில் ஒன்றுக்கொன்று சண்டையிட்ட வண்ணம் உள்ளன.
ஒன்று கோப தாபம், வெறுப்பு, பொறாமை, பொறுமையின்மை, வன்முறை என்கிற எண்ணங்களோடு இருக்கிறது.
மற்றொன்று அன்பு, பொறுப்பு, உற்சாகம், மரியாதை, பாராட்டுதல் என்கிற எண்ணங்களோடு இருக்கிறது."
பேரன் கேட்டான், "எந்த ஓநாய் வழக்கமாக ஜெயிக்கிறது?"
தாத்தா சொன்னார் , " ரொம்ப எளியது என் விடை....எதற்கு நாம் அதிகம் உணவூட்டுகிறோமோ அது தான் ஜெயிக்கிறது.."
என்ன ஒரு மேன்மையான உண்மை...!
டாக்டர் . பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment