Tuesday, April 23, 2013

aadhar card

ஆதார் கார்ட் வாங்கப் போனேன் !
எனது வார்ட் எண் அறிவிப்பு படி நாலு தெரு தள்ளி உள்ள கார்போரஷன் அலுவலகம் சென்றேன் ...
சற்று நேரம் கழித்து இது தான் சரியான இடமா என்று போய் விசாரித்தேன்
இது அல்ல வேறிடம் என்றார் ஒரு உயரமான பெண் அதிகாரி
மாறிச் சென்றோம் குடும்பத்தோடு.
வரிசையில் ஒரு பெரியவர் மற்றொரு பெரியவரை செருப்பு எடுத்து அடிக்க
சென்ற போது நாங்கள் கடைசியாய்.
முன்னால் இரு இளைஞர்கள் நட்போடு பழகினார்கள்
பின்னால் துருதுரு பள்ளிபெண் தன உறவினரோடு
சிறிது கூட நகரவில்லை வரிசை. அரட்டை தொடர்ந்தது.
மெதுவாக கால் வலி உணர்ந்தோம்.
எங்களுக்கு முன்னாள் நின்ற மூன்று பேருக்கும் அவரவர் குடும்பம் வந்து சேர்ந்து
கொண்டது. கிட்டத்தட்ட மேசையை நெருங்கும் நேரம். மணி சரியாக 2.
கண் இருட்டியது. அந்த அலுவலகமும் தான். டோகென் கொடுத்தார் அலுவலர் எங்களுக்கு. எங்கள் எண் 5. சாப்பிட்டு விட்டு 4 மணிக்கு வாருங்கள் என்றார்.
சமைக்காமல் வந்திருந்தனர் என் மனைவியும் அம்மாவும் குழந்தைகளும்.
சரவண பவன் கொடுத்து வைத்தவர்கள் ...கட்டினோம் கப்பத்தை. பெற்றோம் கப் உணவுகளை. பை நிறைய காசு ....கை நிறைய சோறு.
உண்ட பின் விரைந்தோம் அரசு பள்ளிக்கு. வரிசை தொடர்ந்தது
நிறைய பேருக்கு ஆதார் கார்ட் பற்றி, இந்த இடம் எந்த வார்ட் என்று எடுத்து உரைத்தேன் . சில சண்டைகளை கூட பிரித்து வைத்தேன். மூதாட்டிகளை உட்கார சொல்லி உதவினேன். ஒரு 80 வயது தாத்தா ஜோடியை மற்றவர் அனுமதியோடு முன்பு போகச் சொல்லி பரிந்துரைத்தேன். அவர் வேலை முடிந்ததும் கை கூப்பி வணங்கி கிளம்பினார். எங்கள் பின்னாலும் சிலருக்கு குடும்ப உறுப்பினர்கள் வந்து இணைந்து கொண்டார்கள்.
ஒரு வழியாக 5.15 இருக்கும். என் அம்மா சென்று சீட்டில் அமர்ந்தார். அவர் கை சீட்டை பார்த்த அலுவலர் சொன்னார் உங்கள் ரெகார்ட்ஸ் வேறு இடத்தில பதிவாகி உள்ளது என்று. என் சீட்டை காட்டினேன். விடை அதே தான்.
10 முதல் 5.20 வரை தேவுடு காத்து விட்டு 10-20 பேரோடு நட்புறவாடி, நாலு பேருக்கு நல்லது செய்து (நாலும் தெரிந்தவன் போல) நாறி போனது என் நிலை.
அந்த நட்புறவாகியவர்கள் உச் கொட்டினர் பாசத்தோடு....பரிதாபத்தோடு.
கிளம்பினோம் களைப்போடு ...வந்த வேலை முடியாமல்.
விடுவதாக இல்லை. திரும்ப காலை முதலில் சென்ற இடத்திற்கு சென்றோம்.
அங்கு நின்ற ஒரு ஊழியர் என் சீட்டை பார்த்து சொன்னார் "உங்கள் வார்ட் வேறு தான் ...ஆனால் உங்கள் கார்ட் இங்கு தான்"
நாளை வாருங்கள் 10 மணிக்கு என்றார். அது மட்டுமா ? 10 முதல் 12 வரை கரண்ட் கிடையாது ...பணி தொடங்க 12 ஆகும். 1.30 வரை தொடரும் ..அதன் பிறகு டோகென் தருவார்கள்...என்ற போது தலை சுற்றியது.
மனைவி குழந்தைகள் அம்மா இவர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அடுத்த நாள் இன்று தான். போய் பார்த்தால் 10 மணிக்கே 20 பேர். பேப்பரில் போட்டு விட்ட செய்தீ கிளப்பி விட்ட பீதி...!
திரும்பினோம் வீட்டுக்கு 'நாளை சீக்கிரம் போய் முயற்சிப்போம்' என்று.
ஆதார் வாங்கப் போய் சேதாரம் ஆனோம்.
வேலை இன்னும் முடியவில்லை.
இந்த வார்ட் கண்டு பிடிச்சவனை ...அதை தப்பு தப்பாக பதிவு செய்து அலைக்கழித்தவனை அடித்து வார்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது.
நல்லதும் சரி கெட்டதும் சரி நடந்து முடிந்தால் அனுபவம் தான்.
 

No comments:

Post a Comment