Tuesday, April 23, 2013

Lalgudi Jeyaraman - my Tribute

மால்குடி என்றால் அது நாராயணன்
லால்குடி என்றால் அது ஜெயராமன்
இசைப்பது விரல் என்றாலும்
கேட்பது குரலாக இருக்கும்
அதுவே அவர் வாசிப்பின் சிறப்பு
ரஷ்யாவில் இவர் செய்த வில் வித்தை
யஹுதியின் இத்தாலிய வயலின் பெற்றுத் தந்தது
இவர் செய்த பல வர்ணம் இசைக்கு புது வண்ணம் சேர்த்தது
இவர் செய்த பல கிருதிகள் இசைக்கு பாமாலை ஆனது
இவர் செய்த பல தில்லானாக்கள் பல சலங்கை அசைக்க வைத்தது
ஜெயஸ்ரீ,விஷாகா ஹரி, விட்டல், பத்மா, ராம் என
சீடர்கள் பலரை உருவாக்கிய மாகுரு மறைந்தார்
செய்தி அறிந்த போது கண்கள் கசிந்தது
உலகெலாம் தென்னிந்திய இசை தனை
கொண்டு சென்ற வயலின் தூதுவன் காவிரி படுகையின் இசை வயல்
விருதுகள் இவரால் பெருமையுற்றன
விரல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன
பஞ்சேச்வரம் நாட்டிய நாடகம் செய்த இவர் வயது
பன்னிரண்டில் இசைப் பயணம் தொடங்கினார்
ஜெய ஜெய தேவி நாட்டிய இசை செய்தவர்
ஜெய ஜெய என்று சொல்லி இறைவனடி சேர்ந்தார்
முடிவிலா இவர் தம் இசைப்பணிக்கு முடிவில்லை என்றும்
முடிசூடா இசை மன்னர் லால்குடி நம் செவிகளில் வாழ்வார் என்றும்
- இசைப்பித்தன் டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment