Wednesday, April 24, 2013

Sachin turns 40 !

கடவுளுக்கு இல்லை வயது !
தொட்டுவிட்ட சிகரங்களில் தனியாய் இவர் 'ஒருவர்'
இரண்டு பேர் ஆட்டம் இழந்தால் இவருக்கு வாய்ப்பு
ரமேஷ் அவர்கள் பெற்றது இவரையும் சேர்த்து மூன்று
பெரும்பாலும் இவர் மட்டையில் பந்து பட்டால் நான்கு
பெற்ற மாபெரும் விருதுகள் இதுவரை ஐந்து
இவரது உயரம் கூட ஐந்து ஐந்து ...!
உலக கோப்பை ஆட்டங்கள் இவர் ஆடியது ஆறு
இவர் சரிதம் பேசும் புத்தகங்கள் ஏழு
முதல் தர கிரிக்கெட் ஆட்டம் ஆடிய ஆண்டு எண்பத்து எட்டு
கிரிக்கெட் ஆடிய மொத்த நிமிடங்கள் 70020..கூட்டினால் ஒன்பது
இவர் பெயரும் சட்டையில் எண்ணும் பத்து ...டென் !
நூறுகள் அடிக்க இவருக்கு உதவிய நாடுகள் பதினொன்று
இவர் எம் பி ஆகிய ஆண்டு ரெண்டாயிரத்து பன்னிரண்டு
நாற்பது வயதை தொட்டது ரெண்டாயிரத்து பதிமூன்று
இதுவரை சந்தித்த பந்துகள் 50674...எடுத்த ரன்கள் 34263
நூறு முறை நூறு தொட்ட இவர் சாதனை முறியடிக்க யாரு
எழுபத்தாறு முறை ஆட்ட நாயகன் ஆனவர்
பத்தொன்பது முறை தொடர் நாயகன் ஆனவர்
இன்னும் இரு டெஸ்ட் பந்தயம் ஆடினால் தொடுவது இரு நூறு
எத்தனை முறை காயமுற்றாலும் தொடர்ந்து விளையாட வரும் கஜினி
இவரைப் பெற்ற காவியத் தாய் ரஜினி ...!
இவரது மனம் கவர்ந்த குரு பாபா !
இவர் மனைவி மட்டுமா டாக்டர்
இவரும் பெற்றார் இரு முறை பட்டம் டாக்டர்
இவருக்கு தெரிந்த இன்னொரு விஷயம் மிமிக்ரி
இவரது கார் ஷூமேகர் தந்த பெர்ராரி
முட்டைக்கு விளம்பரம் செய்தாலும்
விரும்பி உண்பது மட்டன் பிரியாணி
இவருக்கு குழந்தைகள் இரண்டு ..ஹோட்டல்கள் இரண்டு
டென்னிஸ் கிரிக்கெட் என தெரிந்த விளையாட்டும் இரண்டு
எல்லார்க்கும் இவர் மீது ஒரு craze
இவர்க்கு பிடித்ததோ கார் race
எல்லோரும் மாமியாருடன் பிடிப்பார் தினம் சண்டை
இவர் மட்டும் அவருடன் சேர்ந்து செய்வார் பொதுத் தொண்டை ...
நூற்று நாற்பது பள்ளிகள் இவரால் பெற்றது கழிவறை
ஏழை குழந்தை மீது இவருக்கு என்றும் மிக அக்கறை
வரிசை எனும் போது பிராட்மன் தான் முதலில் ...அறிவிக்கப்பட்ட கடவுள்
வரிசை எனும் போது சச்சின் மட்டுமே முதலில்
கிரிக்கெட் கூட ஒரு தேசப் போர் தான்
பதினாறு வயது முதல் உடலை உயிரை
பணயம் வைத்து போராடும் இவர்க்கு
நிச்சயம் தர வேண்டும் பாரத ரத்னா
பந்து துரத்தி அடிக்கும் இவரது நோய்
தொடர வேண்டும் ...மனைவியே டாக்டர் என்றாலும் அவரிடம்
இந்த நோய்க்கு மருந்தில்லை ...வயது நாற்பது என்றாலும்
தொடர வேண்டும் இவர் தம் நோய் ...இவர்க்கு ஒய்வில்லை ...!
இவருக்கு மூத்தவர் இவர் தாரம் ...எனினும்
இவரே கிரிக்கெட்டின் அவதாரம் ...!
பழகுவதில் இன்னும் இவர் மழலை
பந்தாட்டத்தில் மட்டும் இவர் மழலை மேதை...!

No comments:

Post a Comment