Sunday, June 22, 2014

A young guy who just slogs for the family


In the present moment of inflation, it is difficult to manage the family if only one is earning. That single bread-winner cannot rely just on one salary. Recently I saw an young guy namely Arvind Babu who is having two young children - working with Hyundai show room from 8 to 9 pm in outskirts. He decides to supply 'drinking water' to houses as an agent in late evenings and on Sunday. He also does a bit of 'real estate broker's job'. Every minute is valuable for this guy. I admire this young guy who works hard for the sake of his family. His number is : 9710705153.
விலைவாசி தொடர்ந்து ஏறிக் கொண்டு இருக்கும் நேரத்தில் ஒரு சம்பளத்தில் குடும்பத்தை நிர்வகிக்க முடிவதில்லை. இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் இளைஞர் திரு அர்விந்த் பாபு ஒரு கார் ஷோ ரூமில் நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு, திரும்பி வந்து சில வாடிக்கையாளர்களுக்கு குடி நீர் சப்ளை செய்கிறார். அது தவிர ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களும் செய்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இவருக்கு மிக மிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது. குடும்பம் மகிழ்வாக இருக்க ஒரு இளைஞர் தன்னையே உருக்கிக் கொள்கிறார். பாராட்டும் பரிதாபமும் சேர்ந்து மனதை ஆட்கொள்கிறது. அவரது எண் : 9710705153.

Thursday, June 19, 2014

A man who practices Work LIfe Balance perfectly

Today's appreciation:
I know him for over 25 years. He is in a very responsible position in the office. His wife is a Teacher. He also has two daughters like me. He also has two brothers and two sisters like me. His mother's name is the same as mine. Lots of people talk about "work life balance". But it has to be practically learnt from real life examples. This person drops his wife, daughters to their destinations in the morning before he leaves for his office. Takes care of his parents. Supports his siblings from his college days without any murmur. Goes out almost every Sunday or Holiday with family to a temple or a divine place. Does service in a few temples. I have never seen him or heard him shouting or fighting. He is FULL of love and calmness. He remembers the special days of each person in our family and would surprise all with unique gifts. He would pray for all. Such a darling guy he is. He is large hearted. That is why he is named as Raja by his parents. I admire him for all his exceptionally good qualities.i do not appreciate him today but adore him and salute him - as a living example for many. His number is : 9840771854.
கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு இவரைத் தெரியும். அரசு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு. வீட்டில் மூத்தவன். இரு தங்கை இரு தம்பி - என்னைப் போலவே. இவர் தாயார் பெயரும் லக்ஷ்மி தான் - எங்கள் தாயார் பெயரைப் போல. வீடு அலுவலகம் சமூகம் ஆன்மீகம் எல்லாவற்றையும் சரியாக பாலன்ஸ் பண்ணுவது பற்றி வகுப்பெடுப்பது, அது பற்றி படிப்பது வேறு. ஆனால் அதன் படி வாழ்வது வேறு. இவர்  இரு மகள்கள். மனைவி மூவரையும்  அவர்கள் காலையில் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு விட்டு வந்து விட்டு தானும் தனது அலுவலகத்திற்கு சரியாக செல்வது மிக கடினம். இதை செய்கிறார் இவர். அது மட்டுமா? வாரக் கடைசியில் குடும்பத்தோடு வெளியில் செல்வது, கும்பிட்டு வருவது, உடன் பிறந்தவர்க்கு, பெற்றோருக்கு உதவுவது எல்லாம் செய்கிறார். அது தவிர சில நேரம் கோவில் சென்று சேவை செய்கிறார். எப்போதும் புன்னகைக்கிறார். அதிர்ந்து பேசத் தெரியாது. தகராறு செய்யத் தெரியாது. இப்படி எல்லாமே கெட்ட (!) குணங்கள் இருக்கும் ஒருவருக்கு பெரிய மனசு. அதனால் தான் அவர் பெயர் ராஜா. எப்படி இவரால் இப்படி முடிகிறது. எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரின் நல்ல தினங்களும் இவர் அறிவார். ஒரு பரிசோடு வந்து தான் வாழ்த்துவார். இன்று இவரைப் பாராட்டவில்லை நான். போற்றி வணங்குகிறேன்
இவர் எண் : 9840771854.

Tuesday, June 17, 2014

Selfless sister - a bread winner - heart too.

Today's appreciation:
After leaving her husband who was just responsible in producing two kids - both are daughters - did not do anything in the home front except drinking, abusing and agonizing Kalaiselvi (46 years), she is fighting her life out alone now for the past 18 years and she is the bread winner of her family.  She now lives with her mother who is a widow (aged 76). Kalaiselvi's first daughter (a graduate) is married and has a daughter. The second one has just finished her degree and just about to do her PG. When Kalai decided to fight her battle alone, she joined a hospital as Nursing assistant. After a few years she left her job and started to do the same service on a freelance basis. She goes to help a few patients during the day and stays in any one house to assist the ailing patient. This life has been chosen by herself. She is the one who is helping my mother - who is bedridden for the past 6 weeks - she has been staying with my mom in nights - after her nursing routine she leaves home in the early morning. I have never asked about her personal life till today. And now I feel very sad after hearing her sad story. I simply want to appreciate her and also pray for her harmony, good health and happiness.  If any one wants nursing assistance/just want to wish this lady/help her in any manner - you may contact her in 9789079741.
குடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி குடும்பத்தை குப்பையில் போட்ட ஒரு மனிதன் இனி தனது வாழ்வில் வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்தார் 28 வயது ஆன கலைச்செல்வி. அப்போது அவருக்கு இரு பெண் குழந்தைகள். கணவன் எங்கோ கண் காணாத இடத்தில் உயிரோடு தான் இருக்கிறார். இருப்பினும் இரண்டு பெண்களையும் பட்டப் படிப்பு படிக்க வைத்து 76 வயதான தனது தாயாரையும் பார்த்துக் கொண்டு குடும்பத்திற்கு வருமானம் கொண்டு வருகிறார். அதுவும் பிறருக்கு அரிய, கடினமான சேவை செய்து...(படுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு பணிவிடை செய்து) ஒரு செவிலித்தாயாக, ஆயாவாக...! தனது பெரிய மகளுக்கு திருமணம் செய்து வைத்து - அவருக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு - அடுத்த பெண்ணை அன்போடு கவனித்து வருகிறார். பகல் நேரத்தில் பல இடங்களில் சென்று சேவை ஆற்றுகிறார். இரவில் மிகவும் சிரமப்படக்கூடிய ஒருவர் வீட்டில் சென்று தங்கி இரவு வேலை பார்க்கிறார். கடந்த ஆறு வாரங்களாக எனது தாயாருக்கு பணிவிடை செய்யும் இவரது சொந்த வாழ்க்கை பற்றி நான் கேட்டதில்லை. ஆனால் கேட்ட பின் கெட்டுப் போனது என் மனம். வெயில் தனை தாண்டிய புழுக்கம்  என் மனதில். அட இப்படி கூட வாழ்க்கை இருக்க முடியுமா? எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் நம்பிக்கை தளராமல் - அதுவும் பிறர் துன்பம் போக்கி தன் துன்பம் பாராது சேவை செய்து....! இந்த சேவை சகோதரியின் எண் 9789079741. அழைத்துப் பாராட்டலாம். உதவிக்கு அழைக்கலாம். விரும்பினால் இவருக்கு ஏதாவது செய்து உதவலாம். இவர் போன்ற சேவைத் தாய்கள் வாழ்க.

Monday, June 16, 2014

A Government Employee with a difference - works with smile

Today's Appreciation:
The Public Distribution System (Ration Shop) only makes the Government very effective. Let it be One rupee rice or free rice or Pongal inaam or special salt promoted by the Government, it reaches the common man only through the Ration shop. Generally you will find the same crowded and with a big chaos. People pick up quarrels and fights at times due to impatience and various other reasons. The guys who work there generally are said to be very rude and unfriendly with the public apart from some doing wrong doings. The Government wanted to train some 1500 people in the city alone as a model to make them work effectively and with a smile. They were also expected to keep good rapport with the public - The same assignment was very successfully done by our Vision Unlimited Team. I know Mr. Palani for over one and half decades in our area - works in the Thambiah Road shop, I have always found him to be very kind, smiling and friendly. He immediately resolves people's issues. He would work with extra speed to clear a long queue. He has in fact attended my program as well. When I saw him today, he recalled that program after 6 or 7 years and he maintained the same lovely smile . I want to appreciate this rare guy who works without worries
அரசு தரக்கூடிய இலவச அரிசி மற்றும் இதர பொருட்கள் கடைசி மனிதனை சென்றடைய ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். அவர்கள் எப்போதும் பொது மக்களோடு நல்ல தொடர்பில் இருக்க, விரைவில் பொருட்கள் விநியோகம் நடைபெற இந்த ஊழியர்கள் சிறப்பாக செயல் பட வேண்டும். மக்கள் தொடர்பு, முகத்தில் சிரிப்பு, சலிப்பு இன்றி வேலை செய்தல், இவை மேம்பட 1500 பேருக்கு எங்கள் நிறுவனம் விஷன் அன்லிமிடெட் மூலம் பயிற்சி அளிக்கப் பட்டது. அந்தப் பயிற்சியில் (ஒரு 6-7 வருடங்களுக்கு முன்பு ) என் வகுப்பில் கலந்து கொண்ட திரு பழனி அவர்களை நான் ஏற்கனவே ஒரு 15 ஆண்டுகளாக அறிவேன். நல்ல மனித நேயம் மிக்க, பொறுமையான, மிகத் திறமையான ஒரு ஊழியர் என்று சொல்ல முடியும். எனது பயிற்சியை நினைவு கூர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட அவரை இன்று மனதார பாராட்டுகிறேன். பழனி போன்ற மனிதர்கள் தான் அரசின் நல் முகம். அவர்கள் தான் அரசின் முகவர்களும் கூட. அவர் இனிதே வாழ வேண்டும். பல ஏழைகளுக்கு இவர் போன்றவர்கள் நல்ல தொண்டு செய்கிறார்கள். (ஓரிருவர் தவறு செய்வதை நாம் மறக்க வேண்டும்). புன்னகை முகம் உடைய பழனிகள் நிறைய தேவை.

Thursday, June 12, 2014

My recent poems

டாக்டர் பாலசாண்டில்யன் கவிதைகள் :

கையை காலி செய்து விட்டார்
குழம்பாதே புலம்பாதே - கை
காலியாய் இருந்தால் தானே
அவரால் வேறு ஒன்று தர முடியும் !
--------------------------------------------------------------
அமைதி என ஒன்று
இருக்குமாயின் அது
நீ பெறுவதல்ல
உனக்குள் உறைவது !
--------------------------------------------------------------
பணமில்லை வளங்களில்லை
நம்பிக்கையில்லை
மகிழ்வானவன் எனக்கு(ள்)
உயிருண்டு ...! உலகமுண்டு...!
--------------------------------------------------------------
சோகங்கள் நிறைந்த
பேய்கள் நடுவே
மகிழ்வானவன் ஒரு
மன நோயாளியோ ?!?
---------------------------------------------------------------------
சேருமிடம் எப்போதும்
ஓர் ஊர் அல்ல
உலகை உவகையோடு
பார்க்கும் வழி ....!

Tailor-made solutions from Murugan

Today's appreciation:
Dress always enhances the personality. Ready made clothes as such will not fit everyone though there is a brand, exclusive color and design. Many people though they are not of abnormal size by nature prefer a good tailor - especially women - for perfect fit, comfort and latest and customized design. Here again the tailors are like spouse, colleagues, boss etc - may not suit everyone. Because do not make you happy when it comes to consistency, reliability and delivery. Beyond all these, the tailors also do things wrong - with confusion - as they are less organized. Mr. Murugan is different. Women in our house, our relatives, even some of our neighbors are just after him. He is absolutely unique. His shop is very small in Panagal Park, T.Nagar, Chennai. But the beauty is he collects and delivers the dress at home. He is very consistent. Many a times people wait for him - for their dress to get delivered in late nights. There would be very less corrections/alterations/complaints. His charges are reasonable. He has the knack of satisfying the difficult women. He makes people to smile and walk with confidence and pride. All because of his right fit, new design, understanding specification, reasonable tariff and home delivery. He gets his business only on referrals. For sure people ask "where did you stitch?". Then Murugan gets a new customer. I appreciate this guy (who is diabetic in the recent past due to over work and exhaustion). and wish him good health and success. When he makes others happy GOD has to make/keep him happy. He can be contacted in this number : 9884264987
ரெடிமேட் கூட யாரோ தைத்தது தான். ஆனால் நமக்காக அளவு எடுத்து அல்ல. பொதுவான அளவுப்படி. சிலர்க்கு அது கச்சிதமாக பொருந்தும். சிலர் இரு வேறு சைஸ்க்கு இடையில் இருப்பார். அல்லது அடிக்கடி சைஸ் மாறிக் கொண்டே இருப்பர். அவர்கள் எப்போதும் தேடி அலைவது நல்ல ஒரு டைலரைத் தான். நாம் விரும்பிய படி பிட், comfort, மனதுக்குப் பிடித்த படி தைத்தல் செய்பவர் சொற்பம் தான். அடிக்கடி சிலர் டைலர் மாற்றிக் கொண்டே இருப்பார். குறிப்பாக பெண்களை திருப்தி படுத்துவது மிக சிரமமான வேலை. ஏன் எனில் அவர்கள் எதிர்பார்ப்பு அப்படி. அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்று அவர்கள் நிச்சயம் நினைப்பார்கள். எங்கே வாங்கினாய் அல்லது யாரிடம் தைத்தாய் என்ற பெரும் பேச்சு பெண்கள் மத்தியில் அடிக்கடி நடைபெறுவது உண்டு. எங்கள் வீட்டுப் பெண்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் சில நாட்கள் இரவு தாமதமாக தூங்கப் போவதுண்டு. அதற்கு காரணம் வீடு தேடி வந்து ஆர்டர் எடுத்து வீடு வந்து டெலிவரி கொடுக்கும் மிக நல்ல டைலர் பட்டியலில் இப்போது இருப்பது நண்பர் முருகன் அவர்கள். பனகல் பார்க், தி நகரில் கடை வைத்துள்ள இவர் பெண்களை புன்னகையோடு நம்பிக்கையோடு வைத்திருக்கிறார். காரணம் இவரது தொடர் தரம், சரியான டெலிவரி மற்றும் தையல் கூலி. ஒருவர் சொல்லி மற்றவர் எனும் வாய் வழி விளம்பரம் மூலம் நாளுக்கு நாள் பிஸி ஆகி அண்மையில் உடம்பைக் கெடுத்துக் கொண்டாலும் மிக நல்ல உழைப்பாளி, மனிதர், நேர்மையானவர். புதிய பேஷன் தெரிந்து வைத்திருப்பவர். பெண்கள் மனம் அறிந்து வைத்திருப்பவர். ஜெயித்துக் கொண்டு இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்தோடு இவர் இருக்க வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். பலரை மகிழ்வில் ஆழ்த்த வேண்டும். இவர் எண் : 9884264987.

Wednesday, June 11, 2014

Owner with a difference who knows the customers and their family

Today's Appreciation:
Provision Stores can be found everywhere in every area. But hardly a few people take steps to improve and expand the business and change the ambiance. 'Risk Taking' is the greater ability one needs in business. 'Krishna Stores'  was started in the year 1974 in 7th Avenue Ashok Nagar, Chennai by Mr. V.Somasundaram. It has taken some 33 years for a change of strategy. The Y Gen Entrepreneur - his son S. Krishna (now 40) has taken the initiative of making the stores as a beautiful 'super market' matching to the recent trend from 400 sft to 1500 sft. He has computerized billing, CCTV control and appointed some 4 assistants. The USP in this shop is his personal touch, towering smile, quality products and availability of products in quantity, home delivery etc. He has let the outside space on rent for soup stall and sandwich - as the next door is an IIT class where huge young people come through out the day. That is not all - he knows not the customer alone - BUT the entire family. Krishna knows details of the family of almost every customer. He would inquire about them with genuine interest. That is amazing. Krishna is only 12th standard passed. His wife also helps at times to relieve him to break monotony. Krishna also takes his family on a holiday. He watches positive programs in TV channels. I appreciate this young guy to greater heights.
தந்தை செய்த தொழிலை மகன் இன்று செய்ய தயாரில்லை. ஆனால் சென்னை அசோக் நகரில் உள்ள கிருஷ்ணா சூப்பர் மார்க்கெட் (1974 ல் தொடங்கப்பட்ட போது 400 சதுர அடி - சின்ன மளிகை கடை) வயது காரணமாக திரு சோமசுந்தரம் தனது மகன் கிருஷ்ணாவிடம் தொழிலை ஒப்படைத்து சரியாக 7 வருடம் கூட ஆகவில்லை. கிருஷ்ணா அந்த சிறு கடையை 1500 சதுர அடி சூப்பர் மார்க்கெட் ஆக மாற்றி விட்டார் - அதிலும் கம்ப்யூட்டர் பில், சீ சீ டி வீ, 4 உதவியாளர்கள் என்று வியாபராம் விஸ்தாரம் செய்து விட்டார். வெளி இடத்தை சூப் ஸ்டால் மற்றும் சான்ட்விச் வியாபாரத்திற்கும் வாடகை விட்டு விட்டார். பக்கத்தில் IIT படிக்க பயிற்சிக்கு இளைஞர் பட்டாளம் நாள் முழுக்க வருவர். ரகம், தரம் இவை தாண்டி வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி பிரத்யேகமாக அறிந்து வைத்து இருப்பதும் அவர்கள் பற்றி அன்போடு விசாரிப்பதும் தான் அவரின் நல்ல  குணம். 12வது மட்டுமே படித்து உள்ள கிருஷ்ணா மிகச் சிறப்பாக தொழில் செய்து வருகிறார். அறிவு பூர்வமான டிவி நிகழ்ச்சி மட்டும் பார்ப்பார். இவர் ஓய்வு எடுக்க இவர் மனைவி வந்து உதவுவார். கிருஷ்ணாவின் தொடர்புத் திறன் என்னை வியக்க வைக்கிறது. மாறாத புன்னகை, அமைதி, உடனடி சேவை, தேவை எனில் கல்லா விட்டு நகர்ந்து  வாடிக்கையாளர் அட்டெண்ட் செய்வது இவர் சிறப்பு. வளர்க இவர் மாண்புகள்.