Tuesday, June 17, 2014

Selfless sister - a bread winner - heart too.

Today's appreciation:
After leaving her husband who was just responsible in producing two kids - both are daughters - did not do anything in the home front except drinking, abusing and agonizing Kalaiselvi (46 years), she is fighting her life out alone now for the past 18 years and she is the bread winner of her family.  She now lives with her mother who is a widow (aged 76). Kalaiselvi's first daughter (a graduate) is married and has a daughter. The second one has just finished her degree and just about to do her PG. When Kalai decided to fight her battle alone, she joined a hospital as Nursing assistant. After a few years she left her job and started to do the same service on a freelance basis. She goes to help a few patients during the day and stays in any one house to assist the ailing patient. This life has been chosen by herself. She is the one who is helping my mother - who is bedridden for the past 6 weeks - she has been staying with my mom in nights - after her nursing routine she leaves home in the early morning. I have never asked about her personal life till today. And now I feel very sad after hearing her sad story. I simply want to appreciate her and also pray for her harmony, good health and happiness.  If any one wants nursing assistance/just want to wish this lady/help her in any manner - you may contact her in 9789079741.
குடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி குடும்பத்தை குப்பையில் போட்ட ஒரு மனிதன் இனி தனது வாழ்வில் வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்தார் 28 வயது ஆன கலைச்செல்வி. அப்போது அவருக்கு இரு பெண் குழந்தைகள். கணவன் எங்கோ கண் காணாத இடத்தில் உயிரோடு தான் இருக்கிறார். இருப்பினும் இரண்டு பெண்களையும் பட்டப் படிப்பு படிக்க வைத்து 76 வயதான தனது தாயாரையும் பார்த்துக் கொண்டு குடும்பத்திற்கு வருமானம் கொண்டு வருகிறார். அதுவும் பிறருக்கு அரிய, கடினமான சேவை செய்து...(படுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு பணிவிடை செய்து) ஒரு செவிலித்தாயாக, ஆயாவாக...! தனது பெரிய மகளுக்கு திருமணம் செய்து வைத்து - அவருக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு - அடுத்த பெண்ணை அன்போடு கவனித்து வருகிறார். பகல் நேரத்தில் பல இடங்களில் சென்று சேவை ஆற்றுகிறார். இரவில் மிகவும் சிரமப்படக்கூடிய ஒருவர் வீட்டில் சென்று தங்கி இரவு வேலை பார்க்கிறார். கடந்த ஆறு வாரங்களாக எனது தாயாருக்கு பணிவிடை செய்யும் இவரது சொந்த வாழ்க்கை பற்றி நான் கேட்டதில்லை. ஆனால் கேட்ட பின் கெட்டுப் போனது என் மனம். வெயில் தனை தாண்டிய புழுக்கம்  என் மனதில். அட இப்படி கூட வாழ்க்கை இருக்க முடியுமா? எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் நம்பிக்கை தளராமல் - அதுவும் பிறர் துன்பம் போக்கி தன் துன்பம் பாராது சேவை செய்து....! இந்த சேவை சகோதரியின் எண் 9789079741. அழைத்துப் பாராட்டலாம். உதவிக்கு அழைக்கலாம். விரும்பினால் இவருக்கு ஏதாவது செய்து உதவலாம். இவர் போன்ற சேவைத் தாய்கள் வாழ்க.

No comments:

Post a Comment