Monday, June 16, 2014

A Government Employee with a difference - works with smile

Today's Appreciation:
The Public Distribution System (Ration Shop) only makes the Government very effective. Let it be One rupee rice or free rice or Pongal inaam or special salt promoted by the Government, it reaches the common man only through the Ration shop. Generally you will find the same crowded and with a big chaos. People pick up quarrels and fights at times due to impatience and various other reasons. The guys who work there generally are said to be very rude and unfriendly with the public apart from some doing wrong doings. The Government wanted to train some 1500 people in the city alone as a model to make them work effectively and with a smile. They were also expected to keep good rapport with the public - The same assignment was very successfully done by our Vision Unlimited Team. I know Mr. Palani for over one and half decades in our area - works in the Thambiah Road shop, I have always found him to be very kind, smiling and friendly. He immediately resolves people's issues. He would work with extra speed to clear a long queue. He has in fact attended my program as well. When I saw him today, he recalled that program after 6 or 7 years and he maintained the same lovely smile . I want to appreciate this rare guy who works without worries
அரசு தரக்கூடிய இலவச அரிசி மற்றும் இதர பொருட்கள் கடைசி மனிதனை சென்றடைய ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். அவர்கள் எப்போதும் பொது மக்களோடு நல்ல தொடர்பில் இருக்க, விரைவில் பொருட்கள் விநியோகம் நடைபெற இந்த ஊழியர்கள் சிறப்பாக செயல் பட வேண்டும். மக்கள் தொடர்பு, முகத்தில் சிரிப்பு, சலிப்பு இன்றி வேலை செய்தல், இவை மேம்பட 1500 பேருக்கு எங்கள் நிறுவனம் விஷன் அன்லிமிடெட் மூலம் பயிற்சி அளிக்கப் பட்டது. அந்தப் பயிற்சியில் (ஒரு 6-7 வருடங்களுக்கு முன்பு ) என் வகுப்பில் கலந்து கொண்ட திரு பழனி அவர்களை நான் ஏற்கனவே ஒரு 15 ஆண்டுகளாக அறிவேன். நல்ல மனித நேயம் மிக்க, பொறுமையான, மிகத் திறமையான ஒரு ஊழியர் என்று சொல்ல முடியும். எனது பயிற்சியை நினைவு கூர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட அவரை இன்று மனதார பாராட்டுகிறேன். பழனி போன்ற மனிதர்கள் தான் அரசின் நல் முகம். அவர்கள் தான் அரசின் முகவர்களும் கூட. அவர் இனிதே வாழ வேண்டும். பல ஏழைகளுக்கு இவர் போன்றவர்கள் நல்ல தொண்டு செய்கிறார்கள். (ஓரிருவர் தவறு செய்வதை நாம் மறக்க வேண்டும்). புன்னகை முகம் உடைய பழனிகள் நிறைய தேவை.

No comments:

Post a Comment