Friday, October 25, 2013

Felicitation to Dr. Nirmala Prasad of MOP

MOP வைணவக் கல்லூரி 20 ஆண்டுகள் நிறைவு செய்து சிறப்பான
கல்லூரியாக இருப்பதற்கு அதன் முதல்வர் டாக்டர் நிர்மலா பிரசாத் அவர்களே பிரதான காரணம்.

Dr. Nirmala Prasad அவர்களுக்கு பணிவன்புடன் பாராட்டுரை - Dr.Balasandilyan

written on 25th October 2013


உள்ளமதில் உறையும் அன்பு சக்தியே நிர்மலா
உண்மைகளை உலகுக்கு உரைக்கும் உன்னத செம்மலா
வெள்ளமென கல்வி உரையாற்றும் மதிநிலா
விருட்சமாய் விரிந்து நிற்கும் அறிகதிர் இந்நிலா

இன்பம் சேர்க்கும் அன்னை உருவே நிர்மலா
எவருடனும் அன்பு காட்டும் ஆனந்த வெண்ணிலா
மந்திர அறிவின் எதிரொலியே இந்த வேர்பலா
மாதவம் செய்த பயனே வினையே இந்நிலா

சொல்லில் உதிக்கும் புதுப் பொருளே நிர்மலா
சுடரின் ஒளியென ஜொலிக்கும் வடிவே விழிநிலா
அனுபவம் திகழும் உலகே என்றும் நிர்மலா
அச்சம் உடைக்கும் ஆக்க சக்தியே இந்நிலா

வாழ்வு செழிக்கும் அறிவின் ஒளியே நிர்மலா
வையம் தழைக்கும் செயலின் எழிலே இவள் சொல்லிலா
தாழ்வு அழிக்கும் உயர்வே எழுத்தில் இவள் உலா
தன்னை உணர்த்தும் நிலையே செயும் இந்நிலா

சித்தத்தில் கலந்துள்ள சமூக உணர்வே நிர்மலா
சிந்தனையின் திறமெல்லாம் தெளிவாக்கும் சிந்தைநிலா
இரத்தத்தில் அணுவெல்லாம் பெண் சக்தி இப்பெண்ணிலா
எங்கும் எதிலும் இவள் சாதனை விளங்கும் ஆச்சரியத்திலா

சருகிலும் நுழைந்து சக்தியூட்டும் மாய நிர்மலா
இருள் தின்று ஒளியூட்டும் சூரிய பெண் வடிவிலா
பொலிவிழந்த பூக்களுக்கும் புன்னகை தரும் ஒளிர் நிலா
வலுவிழந்த மலர்களுக்கும் வலிமை தரும் சக்தி உலா

விரிந்து நிற்கும் ஞான மேகமே இவர் இயக்கம் செயல்கள்
வெற்றியுடன் வளரச் செய்யும் முழக்கமே இவர் எண்ணங்கள்
அடிதொட்டு தொடர்பவர்கள் இவர் பின் ஆயிரம் ...
ஆணிவேர் இவர், பலருக்கு அறிவின் புது ஒளி ஞாயிறு ...!

அக்னிகுஞ்சுகளுக்கே வீர நெருப்பை அறிமுகம் செய்வார்
ஆயுதங்களுக்கு உட்படாத கிரணம் இவர் ஆவார்
சங்கதிகளுக்குள் உட்படாத சரணம் இந்த பெண் ஆழ்வார்
சரணம் என பணிந்தேன், பல்லாண்டு இவர் வாழ்வார்

MONEY விழா எடுக்கும் பலர் கண்டதுண்டு நாம் தான்
மகுடம் சூடி பலருக்கு அழகு பார்ப்பவர் இவர் தான்
கல்வி வேறு இவர் வேறு அல்ல என உணர்த்தியவர் தான்
அறிவால் பலரை உயர்த்தியவரும் இவர் தான் வாழ்க ...!

No comments:

Post a Comment