Friday, May 8, 2015

Bala's recent poems

Balasandilyan’s recent poems
கடலே கமல் கமலே கடல்
கடல் 
மகாசமுத்திரம் 
முத்துக்கள், மீன்கள், ஆமைகள்
நவரத்தினங்கள், ஜீவராசிகள் 
தங்கி உயிர் வாழும்.
கமல் 
அறிவுப் பெருங்கடல் 
கலை நடனம் இசை இலக்கியம் 
நடிப்பு நகைச்சுவை 
பொங்கி உயர்ந்தோங்கும் 
கடல் 
நதிகள் எல்லாம் சேருமிடம் 
கமல் 
நடிக நடிகையர் நாடுமிடம் 
கடல் 
நீர் கரிக்கும் 
கமல் 
கலை அதிகரிக்கும் 
கடல் 
அலை அடிக்கும் 
கமல் 
அலை நிலைக்கும் 
கடல் 
ஜீவராசிகளின் இருப்பிடம் 
கமல் 
கலை சுவாசிக்கும் ஜீவராசி 
கடலில் கால் நனைத்தால் புண்ணியம் 
கமலின் கலை நினைத்தால் கண்ணியம் 
கடல் மாதா 
கமல் தாதா 
கடல் 
மூழ்கினால் உயிர் நீங்கும் 
கமல் 
மூழ்கினால் உயிர் ஏங்கும் 
கடலின் நீளம் விவரிக்க இயலாது 
கமலின் உயரம் அளக்க இயலாது 
கடல் நீர் மேகமாகி மழையாகும் 
கமல் கலை மோகமாகி நிலையாகும் 
கமலும் கடலும் ஒன்று 
சிறு மீன் பெரு முதலை திமிங்கிலம் 
சேர்ந்து சங்கமிக்கும் ஒரே இடம் 
அள்ள அள்ளக் குறையாது கடல் 
சொல்ல சொல்ல குறையேது கமல் 
மூன்று பக்கம் கடல் 
எல்லாப் பக்கமும் கமல் 
சூரியன் எழுவது விழுவது கடல் 
யாரெனினும் நிற்பது நிமிர்வது கமல் 
பிறவிப் பெருங்கடல் கூட நீந்தலாம் 
பிறவி பல எடுத்தாலும் யார் இனி கமல் பாத்திரம் ஏந்தலாம் 
உலக நாயகன் என்றும் உத்தமன் 
உலகோரின் ஞானச் சொத்தவன்
தொடர்பில்லா நட்பு 
தோண்டிப் புதைத்தது தான் 
கண்ணில் படாத போது 
மனம் தான் என்ன செய்யும்?
கொடுத்ததைக் கேட்டால் 
அடுத்தது பகை முன்பு 
கெடுத்ததைக் கேட்டாலும் 
அடுத்தது பகை ....இன்று !!
வந்தால் வருவேன் 
தந்தால் தருவேன் 
இது வியாபாரம் அல்ல உறவு !
நட்பில் வேண்டாம் பிளவு !!
வந்த வார்த்தைகளை 
வாரி விட்டு 
நொந்து போனாரே என்று 
நயந்து என்ன பயன் ?
சொந்த வார்த்தை என்றாலும் 
சொந்தங்களை விரட்டும் அவை 
சொர்க்கம் தராது 
நாவடக்கம் இல்லா உலகம் 
நரகம் தான் சந்தேகம் என்ன ?
-
பாலசாண்டில்யன்
வலி வந்தால்
டேப்லட் நேற்று
டேப்லட் வந்ததால்
வலி இன்று
நாற்பது வார்த்தையில்
நாம் விரிவாக...!
நாலு எழுத்துக்களில் அவர்கள்
"ஹூக்கும்"..!!
நான் புல் என்றால்
புலியும் தன் உணவை
மாற்றிக் கொள்கிறது..!
எனவே 
நான் சிப்ஸ் என்றால்
இனி ப்ளு சிப்ஸ்..!!
டாக்டரிடம் முதல் முறை
போகும் போது கஷ்டமர்
அடுத்த முறை போகும் போது
நீங்கள் கஸ்டமர்...!!
மீண்டும் மீண்டும் என்றால்
விஐபி கஸ்டமர்..!!
ஆறுகள் தேடும் கடல்
ஆறுதல் தேடும் உடல்
மாறுதல் நாடும் மனம்
மாடுகள் நாடும் வனம்
- பாலசாண்டில்யன்
மனை 
மனைவி
இரண்டும்
வசிக்குமிடம்
வசப்படும்
காலம் உயிர் போன்றதாகும்.
போனால் வராது காலம்
எடுத்தால் தராது காலன்


2 comments:

  1. தமிழ்தமிழ்அமிழ்தமிழ்

    ReplyDelete
  2. தமிழ்தமிழ்அமிழ்தமிழ்

    ReplyDelete