Friday, May 15, 2015

My poems

அவளுக்கென்ன.?
பார்த்தது
பரிதவித்தது
பசி தூக்கம் மறந்தது
பாடாய்ப் படுவது
பாவம் நான் தானே..!!
அழகாய் என் முன் வந்து போன
அவளுக்கென்ன..!!
- பாலசாண்டில்யன்

---------------------------------
நீ 
எனது ஒளி 
நான் 
உனது நிழல் 
நீ
எனது விழி
நான்
உனது காட்சி
நீ
எனது உலகு
நான்
உனது யாவும்
நீ
எனது கனவு
நான்
உனது நினைவு
நீ
எனது வாழ்வு
நான்
உனது வரமே !!
- பாலசாண்டில்யன்

------------------------------------------
நான் உண்மை புரிந்தேன்
நீ என்னைப் புரிந்தாய்
திருமணம் புரிவாயா என்னை
தோளில் சரிவாயா பெண்ணே....
நான் காத்திருப்பேன் யுக யுகமாய்..
பார்த்து நிற்பேன் மலர் முகமாய்..(நான்)

என்னை காலி செய்தேன் உன்னை நிரப்ப
நினைவு வேலியிட்டேன் நெஞ்சம் பரப்ப
வலிகள் மறந்து நின்றேன் உன்னை அடைய
விழிகள் திறந்து வைத்தேன் வந்து நீ நுழைய
தீர்வாய் வருவாய் மனபாரம் குறைய
தீராநதி காதல் நீ எனக்குள் உறைய (நான்)
பார்வை சமையல் செய்து பரிமாறினாய்
கண்ணில் கவியெழுதி மனம் கூறினாய்
மனமலர் வாடாதிருக்க நீர் ஊற்றினாய்
நானுன் வாழ்வு என்று பறை சாற்றினாய்
ஏனின்னும் எனையடைய தடுமாறினாய்
வா வந்து வரமாக உடன் மாறுவாய் (நான்)
- பாலசாண்டில்யன்
---------------------------------------------------
உடனே தேவை
ரத்தம் அல்ல ...!
ஒரு ஏலேக்ட்ரிசியன்
மனிதர்களுக்கு நடுவே அன்பு எனும் மின்சாரம் பாய்ச்ச !
ஒரு கண்ணாடி தருபவன்
மக்களின் பார்வை தனை மாற்ற !
ஒரு ஓவியன்
மனிதர்கள் முகத்தில் புன்னகை வரைய !
ஒரு கொத்தனார்
பிரிந்து பிளந்து கிடக்கும் மனிதர்களிடையே
பாலங்கள் கட்ட..!
ஒரு தோட்டக்காரன்
நல்ல எண்ணங்களை மனிதன் மனதில் விதைக்க !
ஒரு கணித ஆசிரியர்
நமக்கு கிடைத்திருக்கும் நல்லாசிகளை
எண்ணிப் பார்க்க ..!
நம்மை நாம் விரும்புகிறோம் இத்தனை
தவறுகள் செய்த பிறகும் ...
பிறகு எப்படி மற்றவரை நம்மால் வெறுக்க முடியும்
அவர்களின் சிறு பிழைகளுக்கு...!!??!!
----------------------------------------------
மகாபெரியவா பற்றிய பாடல் :
ராகம் : பெஹாக்
தரிசனம் பெறும் பாக்கியம் - கிடைத்திட
கரிசனம் பெரும் வாக்கியம் - 
பெரியவாளின் கண நேர (தரிசனம்)
சமிக்ஞையில் புரிந்திடுவார் அற்புதங்கள்
தவிக்கையில் அவர் தருவார் ஆறுதல்கள்
எவர் எது நினைப்பதுமே அவர் அறிவார்
அவர்க்கது கேட்காமல் தந்திடுவார் - அவரின் (தரிசனம்)
சொல்லாமல் உணர்ந்திடுவார் பக்தர் சிரமம் -அருட்
சொல்லாலே துடைத்திடுவார் படுந்துயரம்
எல்லாமும் அறிந்திட்ட ஞானஸ்வரூபம்
எல்லோர்க்கும் வரமளிக்கும் அருட்சாகரம் - அவரின் (தரிசனம்)
- Dr. Balasandilyan (One of his recent compositions)

No comments:

Post a Comment