Thursday, June 11, 2020

சும்மா இருத்தல் சுகமே - சிரமமே

சும்மா இருத்தல் சுகமே - சிரமமே
- டாக்டர் பாலசாண்டில்யன்
'செயலற்ற மூளை என்பது சாத்தானின் பட்டறை' என்பார்கள். அப்படி எதுவும் செய்யாமல் சும்மா இரு என்றால் அது மிகவும் கடினம் தானே. இப்படி ஒரு காட்சியை ஒரு திரைப்படத்தில் வடிவேல் செய்வதை, செய்து சிரமப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நாளுக்கு நாள் இந்த கொடிய நோயின் தாக்கம் மற்றும் பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் மீண்டும் அது நம்மை வெளியே வராமல் முழுமையாக முடக்கிப் போடலாம் என்ற செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன. குறிப்பாக சென்னை தவிர இன்னும் சில மாநிலங்களுக்கு இந்த நிலை ஏற்படலாம் என்கிறார்கள் சில விஷயம் தெரிந்தவர்கள். எது எப்படியோ, ஈட்டும் வழி தெரியாமல், வரவு இன்றி செலவுடன் எத்தனை நாள் தான் கொரோனா நம்மை முடக்கி விடுமோ அது கடவுளுக்குக் கூட தெரியாது என்று சொல்லத் தோன்றுகிறது. கொரோனா அரக்கனுக்கு மட்டுமே அது தெரிந்திருக்கிறது.
சரி, என்ன தான் செய்யலாம் 'சிவனே' என்று சும்மா இருக்கும் போது? (சிவன் உட்பட பல கோவில்களில், தேவாலயங்களில், மசூதிகளில் அவரே அப்படி இருக்க வேண்டிய நிலை).
என்ன செய்யலாம் - இதோ எனது
யோசனைகள் ::
ஒன்றும் புதிதாக சொல்லப்போவதில்லை. உங்களுக்கு இவற்றைப் பின்பற்றிட மனம் இல்லாது கூட இருக்கலாம். என்ன செய்வது? நான் சும்மா இருக்க மாட்டேனே !!
- பாட்டு கேட்கலாம், பாட்டு பாடி மகிழலாம்,
- யோகா மற்றும் தியானம் செய்யலாம்
- புத்தகங்கள் வாசிக்கலாம்
- வங்கி கணக்குகள் சரி பார்க்கலாம்
- வீட்டுக்குள் நடக்கலாம்,
- கணினியில் தேவையற்றவற்றை டெலிட் செய்யலாம்
- ஒர்க் பிரம் ஹோம் இருப்பவர்கள் சிறிது அலுவலக வேலை பார்க்கலாம்
- கீ போர்டு வாசிக்கலாம்
- பிள்ளைகளோடு கேரம் மற்றும் செஸ் விளையாடி மகிழலாம்
- வழக்கம் போல முகநூல் மற்றும் வாட்சாப் பார்க்கலாம்
- பிரார்த்தனை செய்யலாம்
- அலுவலக விஷயங்கள் குறித்து நண்பர்களோடு போன் போட்டு பகிரலாம்
- வீட்டு சமையலில் உதவலாம்
- நிறைய நேரம் ஷவரில் குளிக்கலாம்
- அவசியப்பட்டால் முடிக்கு கலர் செய்து கொள்ளலாம்
- நகம் வெட்டிக் கொள்ளலாம்
- வீட்டில் செடி இருந்தால் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றலாம்
- கவிஞர் என்றால் கவிதை எழுதலாம்.
- எழுத்தாளர் என்றால் கட்டுரை கதை எழுதலாம்
- ப்ளாக் வைத்திருப்பவர்கள் அதில் எழுதலாம்
- நல்ல ப்ளாக் தேர்வு செய்து அதில் மூழ்கி படிக்கலாம்.
- நல்ல ஓய்வு எடுக்கலாம்
- மொட்டை மாடியில் மாலை நேரத்தில் காற்று வாங்கலாம்
- வீட்டில் மீன் தொட்டி இருந்தால் அதனை பராமரிக்கலாம்
- வீட்டில் நாய் அல்லது மாடு இருந்தால் அவற்றை குளிப்பாட்டலாம்
- கார் மற்றும் பைக் இவற்றை நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யலாம்
- வேறு கை வேலை தெரிந்தால் அவற்றை செய்யலாம்
- ஓவியம் வரைதல், பிள்ளைகளோடு அமர்ந்து வண்ணம் தீட்டுதல்
- கிராஸ் வர்ட் போடுதல்
- விட்டுப்போன படங்கள் இருந்தால் டிவியில் அல்லது நெட் மூலம் பார்த்து ரசிக்கலாம்
- அனைவரும் சேர்ந்து சிரித்து உணவருந்தலாம்
- பீரோவில் உள்ள துணிகளை எடுத்து அடுக்கலாம்
- அலமாரியில் வேண்டாத பொருட்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தலாம்
- பாத்ரூம் சுத்தம் செய்தல், துணி காயப் போடுதல் பணிகளில் மனைவிக்கு உதவலாம்
இப்படி எவ்வளவோ செய்யலாம் இந்த நேரத்தில்
நிச்சயம் :
- - யாரையும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்காமல் இருக்கலாம்
- யார் வீட்டுக்கும் போகாமல் இருக்கலாம்.
- அவசியப்பட்டால் மட்டும் இன்றி கடைகளுக்கு போகாது இருக்கலாம்
- ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கலாம்
வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை வெளியே தனியே போகாமல் காப்போம். சிறு குழந்தைகளை இதர பிள்ளைகளோடு விளையாட அனுப்பாது பார்த்துக் கொள்ளுவோம்.
ஏற்கனவே இப்படி 75 நாட்களுக்கு மேல் இருந்து விட்டோம். இன்னுமா? கேட்கிறது மனம். ஆனாலும், கண்ணுக்கு எதிரே நிறைய எண்ணிக்கை கூடுவதைப் பார்த்து விட்டோம். அதன் வீரியம் என்ன என்று தெரிந்து கொண்டோம். இப்போது அதனை வென்று நமது கட்டுக்குள் நமது வாழ்க்கை என்ற நிலை மாறிட அரசு எடுக்கும் சில முடிவுகளுக்கு நாம் நிச்சயம் முழு ஒத்துழைப்பு தரத்தான் வேண்டும். உள்ளே இருந்தால் மனச்சோர்வு வந்தாலும், வெளியே போனால் உயிருக்கே ஆபத்து எனும் போது என்ன செய்வது. ஒன்றும் செய்யாது இருப்பது தான் சிறந்த வழி
நமது சுய கட்டுப்பாட்டுக்கு இது ஒரு பரீட்சை தான்.
நிச்சயம் கடினம் என்றாலும், இது பழக்கம் இல்லை என்றாலும் நமது நன்மைக்கு என்று உணர்ந்து செய்வோம். நம்மைக் காத்துக் கொண்டு நாட்டையும் காப்போம்.
நம்பிக்கையுடன் வாழ்வை அணுகுவோம். நல்லதே நடக்கும்.
:

No comments:

Post a Comment