Tuesday, June 9, 2020

ஜூம் வழிமுறைகள் (Zoom Etiquette)

ஜூம் வழிமுறைகள் (Zoom Etiquette)
- டாக்டர் பாலசாண்டில்யன்
(மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்)
இன்று நேரடியாக கூட்டங்கள் நடத்த முடியாத சூழல் என்பதால், பெரும்பாலும் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் சில சமூக இலக்கிய அமைப்புகள் ஜூம் போன்ற சில செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இதில் இந்த அமைப்புகளுக்குத் தான் பெரிய சிரமம் இருக்கிறது. ஏனெனில் மாணவர்களும் நிறுவன ஊழியர்களும் ஓரளவிற்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் பயன்படுத்துபவர் யாரெனினும், சில வழிமுறைகளை, நெறிகளை கடைபிடிக்க வேண்டும். அவை பற்றி இங்கே பார்க்கலாம்.:
1. ஜூம் ஆப் நமது கைபேசி அல்லது லாப்டாப் மூலம் (எதில் இருக்கிறதோ) அதன் மூலம் இணையலாம்.
2. கைபேசி என்றால் அகல வாக்கில் (லேண்ட் ஸ்கெப்) வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
3. இணைய இணைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.
4. நாம் இணைய இருக்கும் மீட்டிங் ஐடி, மற்றும் பாஸ்ஒர்ட சரியாக உரிய இடத்தில் இட்டு நிரப்பி கூட்டத்தில் இணைய வேண்டும்.
5. யார் கூட்டத்திற்கு ஹோஸ்ட் ஆக இருக்கிறார்களோ அவர்கள் அனுமதியுடன் தான் நம்மால் உள்ளே செல்ல முடியும்.
6. உள்ளே வந்த பிறகு நமது ஆடியோவை நாம் பேசாத பொழுது 'ம்யூட்' செய்து வைத்திருக்க வேண்டும்.
7. வீடியோ ஆன் செய்வதற்கு முன்பு நமது பின்புறம் யாரும் நடக்காது இருத்தல் நலம். நாம் சரியான ஆடை அணிந்திருந்தல் நல்லது. கூடுமானவரை நமது பின்புறம் பிளைன் சுவர் இருப்பது நல்லது.
8. முகத்தில் வெளிச்சம் வர வேண்டும். பிறர் பார்க்கும் பொழுது நாம் குனிந்து கொள்ளுவது, போனை எடுத்து பேசுவது, மூக்கை காதை விரல் வைத்து நோண்டுவது தவறு.
9. கூடுமானவரை புன்னகையுடன் இருத்தல் நலம். நமது மார்பு வரை தெரிந்தால் போதும். ரொம்ப பெரிதாகவோ, சிறிதாகவோ நாம் வீடியோவில் வருவது நல்லதல்ல.
10. கேமராவை பார்த்து முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நடுவில் எழுந்து போக வேண்டும். போன் வந்து விட்டது அல்லது தேநீர் பருக வேண்டும் என்றால் நமது வீடியோவை ஆப் செய்து விட வேண்டும்.
11. ஏதாவது குறித்துக் கொள்ள வேண்டும் என்றால் அருகில் பேட் மற்றும் பேனா வைத்துக் கொள்ளலாம்.
12 நாம் பேச வேண்டும் என்றால், சுருக்கமாக சுவையாக - டு த பாயிண்ட் பேசுவது தான் நல்லது. ஏனெனில் ஜூம் மீட்டிங் பெரும்பாலும் நேர மேலாண்மையோடு இணைந்தே செல்லுவது.
13. கூர்ந்து கவனிப்பது, குறைவாக பேசுவது, நிறைவாய் புன்னகைப்பது எல்லாமே ஜூம் மீட்டிங்கில் அவசியமாகிறது.
14. உங்கள் பெயர் என்னவாக ஸ்க்ரீனில் வர வேண்டுமோ அதனை மீட்டிங் நுழைவதற்கு முன்பே சரியாக அளிக்க வேண்டும். அப்போது தான் நாம் வந்திருப்பது மீட்டிங் நடத்துபவர்க்கு தெரியும். நாம் காலக்ஸி, சாம்சங், ரெட்மி என்று போன் பெயர் வைத்து இருந்தால் அது தவறு.
15.பேசும் போது நார்மல் அளவில் குரல் இருக்க வேண்டும். அதிகமாக கத்துவது, முனகி பேசுவது இரண்டுமே தவறு.
16 மீட்டிங் நேரத்தில் சரியாக (முடிந்தால் ஓரிரு நிமிடம் முன்பு) நாம் இணைய வேண்டும்.
17. கேள்வி கேட்பதாக இருந்தால் கை உயர்த்தலாம். ஏதாவது கேள்வி, சந்தேகம் அல்லது கருத்து இருந்தால் - அதில் உள்ள சேட் பாக்ஸ் சென்று அதில் பதிவிடலாம்.
18.நமது போனில் பாட்டரி இருத்தல் வேண்டும், காதுகளில் மாட்டிக் கொள்ளும் ஹெட் போன் வேண்டும்.
19. மீட்டிங் முடியும் பொழுது 'நன்றி' என்று சொல்லலாம். அல்லது சேட் பாக்ஸில் போடலாம்.
20 இந்த நடைமுறை விதிகளை கடைபிடித்தால் நிச்சயம் நமது ஜூம் மீட்டிங் மிகச் சிறப்பாக இருக்கும்.
அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது நாமே நிறைய தெரிந்து கொள்ளுவோம் (சுருக்கமாகப் பேசுவது தவிர)

No comments:

Post a Comment