Wednesday, October 1, 2014

Lady who works hard for success of others

Today's Appreciation:
I know this couple (Krishna Varadharajan alias KV and Anu Rajan) who have done some amazing work in the area of training and development. They must have trained over a lakh of people (kids, parents, sales personnel and other category of employees) across Tamilnadu. KV used to appear in almost all Tamil Channels. His kids used to be managed by employees where his training programs would be on. Anu Rajan who was a central government employee took some risk in life and quit her job against various protests from friends and relatives to support her husband. Later she became an excellent trainer in Memory techniques, Mind mapping, Techniques to score 100. She also authored lots of books along with her better half. Every year the couple also travel to different towns and conduct summer camps for children during holidays very successfully. Just a week back I got a call from Anu inviting me to her center called "Sathana Knowledge Park" in K.K. Nagar. I saw the winner in her cabin. She has an absolutely stunning center for kids - day care center, tuition center, with two training halls, an excellent library etc. I know for sure - the kind of sacrifice the couple have made by continuous travel and staying in any place...eating any food...meeting any kind of challenge with lots of passion. Finally she has become a role model for many people in the State. She has enabled lots of children and parents to lead their happy life and to reach their goals by her able guidance. She is young. She is new. She is also old in terms of knowledge, experience and wisdom. Book on 'Parenting' written by her along with her husband KV has become a super duper hit. I admire and appreciate Anu for her hardwork and her commitment to serve the society. Reach the un-reached is the business mantra Anu follows. This bold and beautiful lady can be contacted for more details in 7299855111
 
பொதுவாக கணவன் செய்வதை மனைவி ஏற்க மாட்டார். இந்த அனுபவம் பல்பு கண்டுபிடித்த எடிசன் அவர்களுக்கே உண்டு. ஆனால் கே.வீ மற்றும் அனு தம்பதியர் முற்றிலும் வித்தியாசமானவர்கள். புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த இடைப்பட்ட சமயத்தில் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து பல இடர்பாடுகளை கடந்து, பல தியாகங்களை செய்து பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு புது வாழ்வு தந்து உள்ளனர். குறிப்பாக அனு மத்திய அரசுப் பணியில் இருந்து விலகி தனது கணவரோடு இணைந்து மெமரி, மைண்ட் மாபிங், மற்றும் நூறு மதிப்பெண் எடுக்கப் பயிற்சி என்று தமிழகம் முழுவதும் பயணித்து பலரை உருவாக்கி உள்ளனர். இவர்கள் பயிற்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே பயன் பெறுவர். விற்பனைப் பயிற்சி, ஊழியர் பயிற்சி, மாணவர் பயிற்சி எல்லாவற்றிலும் கை தேர்ந்தவர் ஆனார் அனு ராஜன் அவர்கள். பிறகு சம்மர் கேம்ப் ஊர் ஊராக நடத்தியதும், கணவருடன் சேர்ந்து பல புத்தகங்களை எழுதியும் சாதித்து நிற்கிறார் இன்று. போன வாரம் தீடிர் என ஒரு தொலைபேசி அழைப்பு அனு ராஜன் அவர்களிடம் இருந்து - தனது புதிய "சாதனா நாலெட்ஜ் பார்க்" எனும் சென்டரை வந்து பார்த்து வாழ்த்திட. நேரம் இல்லாத போதும் அனு அவர்கள் அழைத்தார் என்பதால் சென்று பார்த்தேன். வியந்து மயங்கிப் போனேன். அற்புதமான ஒரு சென்டர் தனை உருவாக்கி உள்ளார். அங்கே குழந்தை காப்பகம், பயிற்சி அரங்கம், நூலகம் என்று பிரமிக்கத் தக்க ஒன்றில் - புலியைத் தனது கூட்டில் கண்டு நெகிழ்ந்தேன். வாயார வாழ்த்தினேன். கடின உழைப்புக்கும், செய்த தியாகத்திற்கும் கிடைத்த நற்பலன் என்பதை காணும் போது மனம் மகிழ்ந்தது. அண்மையில் அனு மற்றும் கே வீ இருவரும் பெற்றோர் பற்றி எழுதி உள்ள நூல் மிகப் பிரபலமாக உள்ளது. புதிய தலைமுறை பத்திரிகை இந்த நூல் பற்றி சிறப்பு கட்டுரை எழுதி உள்ளனர். இவரது சேவைகள் மற்றும் நூல்கள் பெற, அரங்கம் தனை பயன்படுத்த, அனு அவர்களை பாராட்ட :  7299855111 என்ற எண்ணை அழைக்கவும். இன்று இவரை பெரிதும் பாராட்டி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment