Friday, May 2, 2014

Cribbing is of no use

புலம்பு...ஆனால் சிலம்பை உடைக்காதே....சிதறிப் போகாதே ...!

வங்கி போன்ற சேவை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்மணிகள்
நம்மை வருந்தவும் கவலைப்படவும் செய்கிறார்கள்.

முட்டி வலி, முதுகு வலி, பெண்களுக்கே உரிய சிக்கல்கள், வீட்டுப் பிரச்சனை,
அலுவலகம் வந்து சேரும் பிரச்சனை, பெருகி வரும் வாடிக்கையாளர்கள் ...இப்படிஎத்தனையோ காரணிகள்.

எப்போது சென்றாலும் இவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.
கடுகும் தான். சிரிப்பும் புன்னகையும் மருந்துக்கு கூட இல்லை...!

வாடிக்கியாளர்கள் எல்லாம் இன்று வேடிக்கையாளர்கள் தான்..சந்தேகம் இல்லை.
சிறிய வேலை பெரிய வேலை என்றில்லை...உக்காருங்க...அப்புறம் வாங்க...முடியாது போங்க....இப்படித் தான் இவர்கள் பேசுகிறார்கள்.
நம் பணம் அவர்கள் இடம் சிக்கி உள்ளது...நாமும் தான்.

என் செய்வது...பானையிலா வைப்பது பணத்தை...!
நாமெல்லாம் 3 வைப்போம் 2.5 எடுப்போம். 4 என்ட்ரி போடுவோம்.
இருப்பினும் வங்கிகள் நம் உயிர் வாங்கிகள் ஆகி விட்டனவே.

ஏன் இவர்கள் VRS எனும் விருப்ப ஓய்வு பெறக் கூடாது...
ஆனால் இவர்கள் இடத்தில் இளைஞர்கள் வருவார்கள். சிறந்த சேவை தருவார்கள்  என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஏன் எனில் இளைஞர்கள் வேலை பெற சம்பளம் பெற விரும்புகிறார்கள்....வேலை செய்ய அல்ல...!

பெரும்பாலான இடங்களில் இந்த சூழலை பார்க்கலாம்.
சிக்கல் என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்...விடுமுறையில் செல்லுங்கள்...

திரும்பி வந்து உற்சாகமாக செயல்படுங்கள்.
ஆனால் கறுத்த முகம், கடு கடு முகம், சிடு சிடு முகம் மாற வேண்டும்...
மேல் அதிகாரிகளால் இதனை சரி செய்ய முடிய வில்லை.

இவர்கள் தானே உணர்ந்து சரி செய்து கொண்டால் தான் தீர்வு பிறக்கும்.
அது வரை பூனைக்கு மணி யார் கட்டுவது...என்ற எண்ணத்தை கை விடுங்கள்.
என்னைப் போல புலம்புவதை நிறுத்துங்கள்.

இன்சூரன்ஸ், வங்கி, ரயில்வே எல்லாப் பணிகளையும் நெட் மூலம் செய்வோம்.

நெட் ரிசல்ட் இது தான்.

No comments:

Post a Comment