Thursday, August 29, 2013

Bakthi baava

பூஜை என்றால் பக்தி பிரதானமா ? வயிறு பிரதானமா ?
 
வரலக்ஷ்மி பூஜை என்றால் அம்மன் முகம், பல விதமான அலங்காரங்கள், பூக்கள், இதர பூஜை பொருட்கள், வித விதமான பிரசாத உணவு வகைகள்.
 
பிள்ளையார் பூஜை என்றால் - பெரிய பிள்ளையார், பெரிய குடை, எக்கச்சக்க பழங்கள், பூக்கள், தின்பண்டங்கள், அமர்க்கள ஆர்ப்பட்டங்கள்.
 
கிருஷ்ண ஜெயந்தி என்றால் சீடை, முறுக்கு, அப்பம், அவல், இன்னும் எத்தனையோ தின்பண்டங்கள், பூக்கள், வெண்ணை, பூஜை அமர்க்களம் ...!
எல்லாம் உண்டு ...பக்தி தவிர...!
 
ஓரிரண்டு விஷயங்கள் குறைந்தாலும் குறையாமல் இருக்க வேண்டியது ஸ்ரத்தை, பக்தி பாவம். நிச்சயம் படாடோபம் அல்லது பகட்டு அல்ல.
 
ஏன் இப்படி ..! வருடா வருடம் யோசிக்கிறேன் ...!
மாறுவது நெஞ்சம், மாற்றுவது யாரோ ..!
 
எல்லாம் அவன் செயல்...!

No comments:

Post a Comment