Thursday, August 29, 2013

எந்த டிரஸ் எங்கே போடுவது ?


ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் போட்டுக் கொள்வது ஆண் பெண் இரு பாலரிடமும் அதிகரித்து உள்ளது.
 
இதனை casual டிரஸ் என்கிறோம். casual என்றாலே நம்மை அறியாமல் ஒரு சீரியஸ் நெஸ் போய் விடும்.
 
நாம் அணியும் செருப்பு கூட பாத் ரூம் போக ஒன்று, கடை வீதி போக ஒன்று, கோவிலுக்கு போக ஒன்று, காலை நடக்கும் போது, ஆபீஸ் போக ஒன்று, பார்ட்டி என்றால் ஒன்று ..இப்படி ஏன் வேறு வேறு வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு காலணியும் ஒரு மூட் கொண்டு வரும்
 
அது போல பட்டு சட்டை,பட்டு வேட்டி, பட்டு புடவை, பூ, வளையல், சென்ட், நகை இவை கொணரும் மூட் வேறு.
 
அதுவே formal ட்ரெஸ் போட்டால் வரும் மூட் வேறு.
 
அதனால் தான் பள்ளி, அலுவலகம் இவற்றில் சீருடை வைத்துள்ளார்கள்.
அதை நினைக்கமால், மதிக்காமல், ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு ஆபீஸ், கோவில் போனால் நிச்சயம் ஒரு சிரத்தை வராது.
 
லுங்கி போல ஜீன்ஸ் பாண்டை சிலர் மாசக் கணக்கில் தோய்ப்பதில்லை.
அப்போது அதில் ஏறும் கறை, அழுக்கு இவற்றுக்கு மதிப்பு அதிகம்.
 
சில கோவில்கள் (குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மயிலை கபாலி கோவில் இவை ISO சான்றிதழ் பெற்றுள்ளது) இப்போது சரியான உடை இருந்தால் மட்டுமே உள்ளே விடுவதாக அறிவிப்பு விடுத்துள்ளனர். இது சரியே.
 
கேரளாவில் சட்டை போட்ட ஆண்கள் சில கோவில்களில் நுழைய முடியாது.
அந்த அந்த நிகழ்விற்கு, இடத்திற்கு ஏற்ப உடை அணிய வேண்டும் என்ற சுய ஒழுக்கம் வர வேண்டும். அப்போது பிறர் சொல்ல வேண்டி வராது.
 
ஆதார் கார்டு போட்டோ எடுக்கவே துப்பட்டா போடாத பெண்களை திருப்பி அனுப்பியதாக செய்தி படித்தோம்.
 
இதை ஏன் அவர்கள் சொல்ல வேண்டும். நாம் நினைத்துப் பார்ப்போம்.

நமக்கு நாமே சரியாக இருப்போம். நம்மை ஏன் இன்னொருவர் கண் காணிக்க வேண்டும் ...திருத்த வேண்டும் ...!

No comments:

Post a Comment