Wednesday, August 21, 2013

Appadi paodu

சக்கை போடு போடு

சமயலறையில் சப்பாத்தி இட்டுப்போடு
சாமிக்கு சங்கூதி வேட்டுப்போடு
ஆசிரியர் என்றால் குட்டுப்போடு
அனுமனுக்கு வேண்டி பொட்டுப்போடு
போலீஸ் என்றால் சுட்டுப்போடு
பணக்காரன் என்றால் துட்டுப்போடு
கிழிந்த துணியா ஒட்டுப்போடு
உரிமை நிலைநாட்ட ஓட்டுப்போடு
பொல்லாதவனா ஒரு வெட்டுப்போடு
லைசென்ஸ் வேணுமா எட்டுப்போடு
மருத்துவர் என்றால் கட்டுப்போடு
மரக்கன்னு ஆங்காங்கே நட்டுப்போடு
இசையறிஞர் என்றால் மெட்டுப்போடு
காதலிக்கு எதையும் தொட்டுப்போடு
எளிதில் செல்ல ரூட்டுப்போடு
இதுக்கு லைக் உன்னையே கேட்டுப்போடு !

No comments:

Post a Comment