Thursday, August 29, 2013

மன்மத ராஜா to கடல் ராஜா


யான் 'மரியான்' பார்த்தேன் !
 

என்னை பார்த்தா பிடிக்காது ...பாக்க பாக்க தான் பிடிக்கும் என்று நடிகர் தனுஷ் சொன்னது ஒரு மிகப் பெரிய 'டிக்ளரேஷன்'
உண்மையிலேயே அப்படித் தான் ஆகி உள்ளது.
இன்று தனுஷ் பிடிக்காதவர் இருக்க முடியாது.
 

மரியான் படத்தைப் பொறுத்த வரை - ஆழ் நீச்சல் அடிக்க வேண்டும், அதி பிரம்மாண்ட உடை கிடையாது, பேசும் அளவுக்கு 'எக்ஸ்ப்ரெஷன்' காட்ட வேண்டும். ரொம்ப ரொமாண்டிக் மூட் கூடாது. அதே சமயம் லவ் பண்ண வேண்டும்.
 

சண்டை, நீச்சல், நீண்ட நடை, அழுக்கு உடை, பீடி நாற்றம், இப்படி எத்தனையோ சவால்கள். இதை எல்லாம் வெகு சுலபமாக எல்லாம் கை வந்த கலை என்று வெளிப் படுத்தி உள்ளது தனுஷ் அவர்களின் சாமர்த்தியம்.
இந்த படம் ஓடவில்லை என்றால் அது ரசிகர்கள் 'மிஸ்' செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
 

நல்ல கதாநாயகி, யதார்த்தமான சண்டைக் காட்சிகள், புதிய லொகேஷன், வித்தியாசமான கதை அமைப்பு ...எல்லாவற்றையும் மிஞ்சும் ரஹ்மான் இசை விருந்து...! ஒவ்வொன்றும் ஒரு சுவை - ஒரு ஆப்ரிக்க பாடல் (யுவன் பாடியது) உள்பட ..!
 

ஒரு விஷயம் செய்திருக்கலாம் : தூள் படத்தில் ஒரு விஷயம் சாதித்து விட்டு திரும்பும் விக்ரமுக்கு கிடைக்கும் ஊர் வரவேற்பு, சிடிசன் படத்தில் அஜித்துக்கு கிடைக்கும் வரவேற்பு தனுஷ்க்கு ஊர் திரும்பும் போது கிடைக்கவில்லை தனது காதலி காட்டும் அன்பு தவிர. சூடான் நாட்டிலிருந்து தனது கிராமம் வளர கொஞ்சம் பணம் அனுப்பியது போல் சற்று வந்திருந்தால் அந்த விஷயம் நிச்சயம் இந்த படத்திலும் நடந்திருக்கும்...!
 

நிச்சயம் இந்த படம் தனுஷ் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய மைல்கல்.
பல விருதுகள் இவருக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ரஹ்மான் இசைக்கும், காமெரா காட்சிகளுக்கும் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது...!
 

இது வரை பார்க்க வில்லை என்றால் பாருங்கள் ...! நிச்சயம் பிடிக்கும் ..!

No comments:

Post a Comment