Friday, August 30, 2013

My Poem on elders as a song (recently sung in a public prog)

முதியோர் நலம் காப்போம்
அன்பின் நிறம் வெண்மை ..அறிந்து கொள் மனமே
அன்பின் நிறம் வெண்மை
அந்த வெண்மையில் நாமும் அந்த உண்மையில் நாமும்
ஒன்றறக் கலந்தால் இல்லை இனி பேதமே .!
ஆண்டவன் நிறம் வெண்மை அறிந்து கொள் மனமே
ஆண்டவன் நிறம் வெண்மை
அவனருள் இருந்தால் நாம் அவனுடன் கலந்தால்
இல்லை இனி மன இருளே !
உறவுகள் சேதம் ஆனதினாலே
உராய்வுகள் நிதமும் இருப்பதினாலே
நிம்மதி பறந்தோடுதே ..
அன்பின் நிறம் வந்து கலந்து விட்டாலே
அனைத்து முகங்களும் பளிச்சோங்குமே
அகிலத்தில் சோகங்கள் பறந்தோடுமே
(வேறு) ஜூலை மாதம் வந்தால் திரைப்பாடல் மெட்டு
பெரியவங்க சுருங்கி வழக்கில் ஆச்சு 'பெரிசு'
சிரியவங்க வாழ்வில் ரெஸ்பெக்ட் ஆச்சு புதுசு
அன்பு பாசம் என்பது ஹைதர் காலப் பழசு
அடங்கு பொத்து என்பது இப்போ ரொம்ப எளிசு
சேர்ந்து வாழும் முறைதான் சில்லியாகிப்  போச்சு
சோர்ந்து போகும் மனம் தான் எங்குமாகிப் போச்சு
சார்ந்து வாழும் நிலையே முதியவர்க்கு ஆச்சு
கூர்ந்து பார்த்தால் எவரும் செல்பிஷாய் ஆயாச்சு
(வேறு)
அன்பின் நிறம் வெண்மை அறிந்து கொள் மனமே
அன்பின் நிறம் வெண்மை
அன்னையும் தந்தையும் ஆசி தந்தாலே
ஆனந்தம் அங்கே நிறைந்து விடும்
அன்னையை தந்தையை அரவணைத்தாலே
அகிலமும் அன்பில் அடங்கி விடும்
அன்பே ஆண்டவன் என்பதை இங்கே
அனைத்து மதங்களும் சொல்கின்றதே
முதியோர்க் கன்பை நாளும் தருவோம்
முடிவிலா அன்பை நாமும் பெறுவோம்
ஆகிடும் உலகே ஆனந்தமே - இன்று
ஆகட்டும் அன்பின் ஆரம்பமே


அன்பின் நிறம் வெண்மை அறிந்து கொள் மனமே
அன்பின் நிறம் வெண்மை

No comments:

Post a Comment