Friday, August 16, 2013

Moral Story heard and shared

ஆடுகிறமாட்டைஆடிக்_கற‬!

இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகவியல் கல்லூரியான ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் மனிதவளத்துறை பேராசிரியராக உள்ள பல்தேவ் சர்மா அடிக்கடி சொல்லும் கதை இது.

ஒரு கிராமத்தில் திருவிழா. பக்கத்து ஊரிலிருந்து ஏராளமானவர்கள் லாரியில் வந்துகொண்டிருந்தார்கள். வழியில் குறுகிய பாலம். அதில் எருமை மாடு படுத்துக் கொண்டிருந்தது. அது நகர்ந்தால்தான் லாரி முன்னால் போகமுடியும்.

டிரைவர் ஹார்ன் அடித்தார். மாடு நகரவில்லை. சிலர் லாரியிலிருந்து கீழே இறங்கி மாட்டைச் சாட்டையால் அடித்தார்கள், குத்தினார்கள். மாடு நகரவேயில்லை.

அவர்களோடு வந்த சிறுவன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தான். கீழே கிடந்த வைக்கோலை எடுத்தான். மாட்டின் வாய் அருகே காட்டினான். மாடு மெள்ள எழுந்தது. சிறுவன் வைக்கோலை காட்டியபடியே பாலத்தின் முடிவை நோக்கி ஓட, மாடும் பின்தொடர்ந்தது.

நீதி: ஊழியர்களை அதட்டி மிரட்டினால், அவர்களிடம் வேலை வாங்க முடியாது. நயமாக, அவர்கள் போக்கில் நடக்கவிட்டால், முழுத் திறமையோடு, அர்ப்பணிப்போடு பணியாற்றுவார்கள்.

No comments:

Post a Comment