Tuesday, October 9, 2012

React or Respond...?



செயல்பாடா ? எதிர்வினையா ? - டாக்டர் பாலசாண்டில்யன்

ஓர் உணவகத்தில் அனைவரையும் யோசிக்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது
எங்கிருந்தோ ஒரு கரப்பான்பூச்சி பறந்து வந்து ஒரு பெண்மணியின் மீது அமர்ந்தது. அவ்வளவு தான். அங்கே ஒரே ரகளை. பயத்தில் அந்த பெண்மணி கத்திக்கூச்சலிட்டு குதித்தாள்...ஓடினாள்...! அவள் முகம் வெளிறியது . இரு கையையும் அசைத்து ஆட்டி அந்த கரப்பான்பூச்சியை விரட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.
அந்த பெண்மணியின் கத்தல் கூச்சல் மற்றவர்களையும் தொற்றிக்கொண்டது. அவருடன் வந்த மற்றவர்களும் பயந்து கூச்சலிட்டு குதிக்க ஆரம்பித்தனர். அந்த இடமே ஒரு சந்தைக்கடையாக மாறியது . ஒரு வழியாக அந்த பூச்சியை அவர் விரட்டி விட்டார். ஆனால் அந்த பூச்சி அதே கூட்டத்தின் வேறு ஒரு பெண்மணியின் மீது சென்று அமர்ந்தது.
இப்போது அந்த பெண்மணியின் ஆட்டம் ஆரம்பமானது. அதே நாடகம் தொடர்ந்தது.
அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஒரு ஊழியர் உதவிக்கு வந்தார். பூச்சி இப்போது அவர் மீது ஏறியது.
அவர் அசையாமல் நின்றார். நிதானமானார். பூச்சியின் அசைவுகளை கவனிக்க ஆரம்பித்தார். அது அவர் சட்டை மீது நகர்ந்து கொண்டு இருந்தது. நம்பிக்கையோடு டக்கென்று அந்த பூச்சியை அவர் கையில் பிடித்து விட்டார். உடனே வாசலுக்கு ஓடி அந்த பூச்சியை அங்கே கடத்தி விட்டு உள்ளே வந்து கை கழுவிக்கொண்டார்.
அதே உணவகத்தில் காபி குடித்து கொண்டிருந்த நான் இந்த அமர்க்களத்தை கண்டு களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என் மனதில் எண்ண ஓட்டம் ஆரம்பித்தது. இவர்கள் அனைவரின் இந்த கேலிக்கூத்துக்கு ரகளைக்கு அந்த கரப்பன்பூச்சியா காரணம் ?
அப்படி அதுவே சரி என்றால் அந்த உணவாக ஊழியர் மட்டும் ஏன் அந்த சூழலை சத்தமின்றி கூச்சலின்றி பதற்றமின்றி  நிதானமாக சமாளித்தார்..?
அந்த பூச்சியை விட அதனை சமாளிக்க இயலாத அந்த பெண்மணிகளின் செயல்பாடே அதனை ரகளைக்கும் காரணம் என்பதே உண்மை.
எனக்கு இந்த சூழலை ஒத்த ஒரு உண்மை புலப்பட்டது. என் வீட்டில் மனைவியோ குழந்தையோ அல்லது அலுவலகத்தில் எனது உடன் பணியற்றுபவரோ மேலதிகாரியோ என்னை தொந்தரவு செய்ய வில்லை. ஒரு சூழலை சமாளிக்க முடியாத எனது இயலாமையே எனது சத்தம், பதற்றம் இவற்றுக்கு காரணம்.
என்னால் கட்டுபடுத்த முடியாத, மாற்ற முடியாத விலைவாசி ஏற்றம், டிராபிக் ஜாம் இவையெல்லாம் என்னை வெகுவாகவே பாதிக்கிறது என்பது தான் உண்மை.
பிரச்சனைகளை விட அதை நான் எப்படி கையாள்கிறேன் என்பது தான் முக்கியம். கூச்சலோ கத்தலோ ரகளையோ எந்த சூழலையும் மாற்றி விடாது. நாம் தான் அதனை திறமையாக சமாளித்து கையாள வேண்டும். அதில் தான் நமது திறமை அடங்கி இருக்கிறது.
இங்கே நாம் கற்க வேண்டிய பாடம் என்ன தெரியுமா ?
நமது எதிர்வினையை விட சீரிய செயல்பாடே எந்த சூழலுக்கும் தேவையானது. பதற்றமோ கூச்சலோ செய்வதை விட திறம்பட சமாளித்தல் தான் புத்திசாலித்தனம்.
அந்த பெண்மணிகள் கூச்சலிட்டார்களே தவிர சவாலை கையாளவில்லை. ஆனால் அந்த உணவாக ஊழியர் திறம்பட சவாலை கஷ்டமான சூழலை சமாளித்தார். செய்ய வேண்டிய செயலை செய்தார்.
கத்துவது கோபப்படுவது உணர்சிவசமானது. ஆனால் சீரிய செயல்பாடு புத்திசாலித்தனமானது.
உறவுமுறை, வியாபாரம் எதுவாயினும் response தான் reaction விட சிறப்பானது.
கோபம், பதற்றம், வேகம், குழப்பம் இவை இருக்கும் போது நம்மால் எந்த செயலோ முடிவோ செய்ய முடியாது.
விவேகம், நிதானம், அமைதி இவை தான் வெற்றி தரும்.

No comments:

Post a Comment