Saturday, October 20, 2012

Baalavin kavithaigal

படிப்பறிவு இல்லாத பட்டறிவும்
பட்டறிவு இல்லாத படிப்பறிவும்
பயன் தராது !

வாழ்கையை தேடுங்கள்
வறுமை தாமாகவே
தொலைந்து விடும்...!
கறுப்பு முடி வச்சுக்கிட்டா
கறுப்பு சட்டை போட்டுக்கிட்டா
கறுப்பு பணம் வச்சுக்கிட்டா
விலைவாசி குறையுமா ?
கண்ணை மூடி யோசிச்சா
எல்லாமே கறுப்பா இருக்கு ...!


எழுத்து தெய்வம்
எழுதுகோல் தெய்வம்
எழுத்தறிவித்தவன் தெய்வம்
அதனால் தான் ஆசிரியர்களுக்கு இன்னும் கூட
தேங்கா மூடி கொடுக்கிறார்கள் ...!

இன்பம் என்பது
போராட்டத்திலும்
செயல்பாட்டு முயற்சியிலும்
இடையில் வரும் இடர்பாடுகளிலும் கூட
இருக்கிறது...
வெற்றியில் மட்டுமல்ல...!
- டாக்டர் பாலசாண்டில்யன்

எதிர்பாராத சூழலை தினம்
நாம் சந்திக்கிறோம் என்றால்
சரியான பாதையில்
எதிர்பார்த்ததை விட
வேகமாக பயணிக்கிறோம்
என்று கொள்ளலாம் ...!

பொறுமையும் தாழ்மையும்
நமது பலவீனமல்ல
அவை நமது உள்மனதின்
பலத்தை எடுத்துரைக்கிறது
-டாக்டர் பாலசாண்டில்யன்

வருங்காலம் என்பது நிர்ணயிக்க முடியாதது
ஆனால்
நமது நாளைகளை சிறப்பாக 'அவன்'
நிர்ணயித்து விட்டான்
எனவே
'அவனை நாம் இன்று நம்புவோம் ...!

வீணையாய் இருந்து இசை கொடுத்து
காதில் தேன் சொறிவதை விட
விறகாய் இருந்து அனல் கொடுத்து
வயிற்றில் பசி போக்கும் மரமாய் இருப்பதுவே
என் மனதுக்கு ஆறுதல்.....!
- டாக்டர் . பாலசாண்டில்யன்
புதிய பார்வை
---------------------
இலையுதிர்காலமும் ஒரு
வசந்த காலம் தான் !
உதிர்ந்த ஒவ்வொரு இலையும்
மலராய் தெரியும் போது !
மலரட்டும் மனங்கள்!
உதிரட்டும் மௌனங்கள்!!
- டாக்டர்.பாலசாண்டில்யன்


மழை தாயே
வானம் குழைத்தாயே
பூமி நனைத்தாயே
வெட்பம் குறைத்தாயே
மனதை நிறைத்தாயே
வளமை சேர்த்தாயே
வயலை இரக்கத்தோடு பார்த்தாயே
பருவம் பொய்க்காமல் அடிக்கடி
வா தாயே !
அண்டை மாநிலத்தில் கை நீட்டாமல்
தடுத்தாயே ...மானம் காத்தாயே !
வணங்கி நிற்கிறோம் ...ஏற்பாயே !
- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment