Tuesday, October 9, 2012

We are educated...But are we smart..?



வாழ்க்கை பாடம்
 எனக்கு வந்த மெயில் இது ..! –
டாக்டர் பாலசாண்டில்யன்

வழக்கம் போல அந்த 6.45 மணி வண்டில ஏறி உட்கார்ந்தேன் .
வண்டி கூடுவாஞ்சேரியை தாண்டும் போது சமோசா விற்பவர் ஏறினார்வண்டியில் வழக்கம் போல கூட்டம். என் பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்காருற மாதிரி ஒரு இடம் இருந்தது. சமோசாகாரர் என் பக்கத்துல வந்து உட்காந்தார்.

நான் இறங்குமிடத்திற்கு இன்னும் நேரம் இருப்பதால் அவரிடம் பேச்சு கொடுத்தேன்

"இன்னிக்கு எல்லா சமோசாவும் வித்து முடிசிட்டிங்க போல "
"ஆமாம் ஆண்டவன் புண்ணியத்துல இன்னிக்கு புல் சேல்ஸ்"
"உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு..ஒரே வேலையை செஞ்சு அலுப்பா இருக்கும் தானே..?"

"என்ன செய்வது சார் ...இது போல சமோசா வித்தா தான் எங்களை போல இருக்கறவங்களுக்கு 75 பைசா கமிஷன் கிடைக்கும் "
" அப்படியா ஒரு சமோசா வித்தா 75 பைசா கமிஷன் கிடைக்குமா? ஒரு நாளைக்கு சராசரியா எத்தனை விப்பிங்க ?"

"அலுவலக நாள்கள்ல ஒரு நாளைக்கு நாங்க ஒவ்வொருவரும் சுமாரா 3000 அல்லது 3500 விப்போம் . கொஞ்சம் டல்லா இருக்கிற நாளுல 1000 விப்போம். ஆனா எப்படியும் ஆட்டி கூடி சராசரியா 2000 வித்துடுவோம்."

எனக்கு கொஞ்சம் வாய் அடைச்சு போச்சு. இந்த மனுஷன் அப்படி இப்படி 2000 சமோசா ஒரு நாளைக்கு விக்கறான்னா ...ஒரு சமோசா 75 பைசா மேனிக்கு ஒரு நாளைக்கு 1500 ருபாய் ...மாசத்துக்கு ரூபாய் 45000 அட கடவுளே... நினைச்சாலே தலை சுத்துதே ...!

வேற என்ன கேக்கறது 'இவரிடத்துல'...!
"நீங்களே இந்த சமோசா தயாரிக்கிரிங்களா...?"
"இல்லை சார் ..எங்க முதலாளி சமோசா தயார் பண்ற இடத்துல வாங்கி என்ன மாதிரி ஆளு மூலமா வியாபாரம் பண்றாரு ...வித்து வர காசுல நாங்க கட்டும் போது  ஒரு சமோசாவுக்கு 75 பைசா எங்களுக்கு கொடுக்கிறார் ..!"

எனக்கு சுத்தமா பேச்சு வரலை ...அவர் தான் தொடர்ந்து பேசினார். ..
"நாங்க சம்பாதிக்குரதுல அதிக பட்சம் சொந்த செலவுக்கே செலவாகுது ...மீதி இருக்குற காசுல தான் மற்ற விபரத்தை கவனிக்கிறோம். "
"மற்ற பிசினசா ...அது என்னது ?"

"லேன்ட் பிசினஸ் தான் ..ஒரு எட்டு வருசத்துக்கு முன்னால ஊரபாக்கதுல ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன் மூணு லட்சத்துக்கு ...அதை போன மாசம் பதினஞ்சு லட்சத்துக்கு வித்தேன்...அதை வைச்சு உதிரமேருர்ல அஞ்சு லட்சத்துக்கு ஒரு லேன்ட் வாங்கினேன்."
"மீதி பணத்தை என்ன பண்ணினீங்க .."

ஒரு ஆறு லட்சத்தை எடுத்து பொண்ணு கல்யாணத்துக்கு வச்சுட்டேன் ...நாலு லட்சத்தை தூக்கி பாங்குல போட்டேன்..."
"ஏன் அண்ணே ...நீங்க என்ன படிச்சிருக்கிங்க (என்னை அறியாம மரியாதையா கூப்பிட்டேன் ).."

"என்ன பெரிசா.... மூணு வரைக்கும் தான்.... அதுக்கு படிக்க முடியலை ...படிப்பும் வரலை..ஆனா ஒன்னு நிச்சயம்ங்க ...உங்களை மாதிரி நல்ல படிச்சிட்டு சூப்பரா டிரஸ் பண்ணிக்குன்னு பளிச்சுன்னு  இருக்குறவங்களை விட அழுக்கா இருக்கற நாங்க ஏசில உக்காரம சமோசா வித்தே ஜாஸ்தி சம்பதிக்கிரோம்னு வெச்சுக்குங்க ...!"

இந்த நேரத்துல நான் என்ன சொல்ல ...ஒரு லட்சாதிபதி கிட்ட பேசி கிட்டு இருக்கேன்...யோசிச்சு தான் பேசனும்..

அதுக்குள்ளே அவர் இறங்குற இடம் வந்து விட ..."வரேன் சார் ...குட் லக் சார்.." னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுனார் .

எனக்கு மேல் மூச்சு வாங்க ஆரம்பிச்சது அடங்க பத்து நிமிஷம் ஆச்சு...
என்ன படிச்சு என்ன பிரயோசனம் ...! பொழைக்க தெரியலயே..!

நம்ம தலைல இப்படி தானே விதிச்சுருக்கு...!

No comments:

Post a Comment