Tuesday, October 9, 2012

humor - medicine for mind



மகனுக்கு ஒரு கடிதம்  -  from a mail received recently…Dr.Balasandilyan

அன்பு மகனுக்கு அம்மாவின் கடிதம்

நான் வெல் நீயும் அதே வெல்லுல இருப்பேன்னு நம்புறேன்

நான் இந்த கடிதத்தை மெதுவா எழுதறேன் ஏன்னா உனக்கு வேகமா படிக்க வராதுன்னு எனக்கு தெரியும்

நம்ம வீட்டை இருபது மைல் தூரம் தள்ளி மாதீடோம் ஏன்னா இருபது மைல் தூரத்துல தான் இப்போ அதிக விபத்து நடக்கிறது

நம்ம புது வீடு முகவரியை இப்போ கொடுக்க முடியாது ஏன்னா முன்னால குடி இருந்தவங்க இந்த வீடு நம்பர் ப்ளேட்டை எடுத்துக்குடு போய்ட்டாங்க
நாங்களும் முந்திய வீட்டு முகவரி ப்ளேட்டை எடுத்துட்டு வந்து ரெண்டு நாளுல அடிச்சிடுவோம்

இங்கே வெதர் சரியில்லை. போன வாரம் ரெண்டு முறை மழை . முதல் வாட்டி மூணு நாள் மழை ....ரெண்டாம் வாட்டி நாலு நாள் மழை...
நீ அனுப்ப சொன்ன கோட்டை அப்படியே அனுப்ப முடியலே. ஏன்னா அதுல இருந்த மெட்டல் பட்டன் ரொம்ப கனம் அதிகம்

அதனாலே உங்க சித்தி சொன்ன படி அந்த பட்டனை கோட் பாக்கெட்டுல போட்டு அனுப்பிட்டோம் .

உங்க அப்பாவுக்கு வேற வேலை கிடைச்சிருக்கு. ஐநூறு ரூபா சம்பளம். அவருக்கு கீழே 200 பேர் இருக்காங்க . அவர் சுடுகாட்டுல வேலைக்கு சேந்துருக்கார் .
நானும் மருமகளும் போன வாரம் சென்னையில ஒரு ஓட்டலுக்கு  போயிருந்தோம் . அங்கே ஒரு சும்மிங் பூல் இருந்துச்சு. அந்த மேனேஜர் ரெண்டு பீசுல தான் குளிக்கனொன்னு சொன்னான். எதை கழட்டுவதுன்ற கொழப்பதுல்லே குளிக்காமலே வந்துட்டோம்.

உன் தங்கச்சிக்கு நேத்து கொழந்தை பொறந்துருக்கு . ஆனா அது ஆணா பொன்னானு தெரியலேஅதனாலே நீ மாமாவா அத்தையான்னு தெரியலே

உங்க மாமா கிணத்துலே விழுந்துட்டான் காப்பாத்த போன மூணு பேரையும் அடிச்சு தள்ளிப்புட்டு உள்ள முழுகிட்டான். அவனை வெளியே எடுத்து பொதைச்சோம்....மூணு நாளு எரிஞ்சுது அவன் உடம்பு .

வேற பெரிசா விஷயம் ஏதும் இல்லை இதுக்கு மேல.
அன்புடன்  அம்மா.

குறிப்பு :
இந்த லட்டேரோட உனக்கு பணம் அனுப்பனம்னு தான் பாத்தேன் ...அதுக்குள்ளே இந்த கவரை மூடீட்டேன்..அடுத்த முறை அனுப்பறேன்

No comments:

Post a Comment