Monday, August 25, 2014

Cause - Root Cause...get into it

உடனடி காரணம் மூல காரணம்:
ஓர் ஊரில் ஒரே ஒரு குடிநீர் கிணறு இருந்தது. ஒரு நாள் அதில் ஒரு நாய் விழுந்து இறந்து போனது. குடிநீர் நாற்றம் ஏற்பட்டு வீண் ஆனது. 

செய்வதறியாமல் ஊர் மக்கள் பெரியவர் ஒருவரை சந்தித்து யோசனை கேட்டனர்.

அவர் 100 வாளி நீர் இறைத்து கீழே கொட்ட சொன்னார். அதன் பிறகும் அதே நாற்றம். மீண்டும் பெரியவரிடம் சென்றனர்.

இன்னொரு 100 வாளி நீர் வெளியேற்றச் சொன்னார். நாற்றம் குறைந்தபாடில்லை. மீண்டும் 100 வாளி நீர் எடுத்தனர்.

பெரியவர் முன்னால் கிராமத்து மக்கள் மீண்டும்...!

பெரியவர் கேட்டார்"நாயை எடுத்து எறிந்த பிறகு தானே தண்ணீரை வெளியேற்றினீர்கள்?!" மக்கள் ஒரே குரலாக "நாய் அப்படியே தான் உள்ளே கிடக்கிறது" என்றனர்.

பெரியவர் சிரித்துக் கொண்டே சொன்னார் "உங்களுக்கு அது புரியும் என நான் நினைத்தேன்"

ஊர் மக்கள் திரும்ப வந்து நாயை வெளியே அகற்றி விட்டு மீண்டும் 100 வாளி நீரை வெளியேற்றினார்கள்.

இப்படித்தான் நாமும் நம் வாழ்வில் மூல காரணத்தை மறந்து விட்டு உடனடி காரணிகளை மட்டும் கவனிக்கிறோம்.

அதனால் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன...பிரயத்தனங்கள் செய்த பிறகும்..!

No comments:

Post a Comment