Thursday, August 28, 2014

Love and care always save our life

அரவிந்த் ஒரு காய்கறி வாங்கிப் பகிர்ந்தளிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தான்.  
ஒரு நாள் அவன் குளிர் பதனிக்கும் அறைக்குள் ஏதோ எடுக்கப் போனான். தீடிர் என அதன் கதவு சாத்திக் கொண்டு லாக் ஆனது. உதவிட எதுவும் யாரும் இல்லை. இவன் கூக்குரல் வெளியே கேட்காதபடி மாட்டிக் கொண்டான். கெட்ட நேரம் ...செய்வதறியாது தவித்தான். பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிந்தது. 
கிட்டதட்ட மரணத்தோடு போராடிக் கொண்டு இருக்கும் போது செக்யூரிட்டி ஆபீசர் கதவு திறந்து உள்ளே வந்து சரியான நேரத்தில் அரவிந்தை காப்பாற்றினார்.
அரவிந்த் ஆச்சரியம் தாங்க முடியாமல் கேட்டான், " இது உங்கள் வழக்கமான ரோந்து வரும் இடம் இல்லையே எப்படி உள்ளே வந்தீர்கள் ...எப்படி நான் உள்ளே இருப்பது தெரிந்தது ?"
செக்யூரிட்டி ஆபீசர் ஸ்டீபன் சொன்னார், " நீங்கள் ஒவ்வொரு நாள் அலுவலகம் உள்ளே நுழையும் போதும் எனக்கு வணக்கம் வைப்பீர்கள். அதே போல வீடு கிளம்பும் போது பை டேக் கேர் என்பீர்கள் ..அது எனக்கு வழக்கம் ஆயிற்று.
இன்று வணக்கம் சொன்ன நீங்கள் எங்கே எப்போது சென்றீர்கள். ஏன் எனக்கு பை சொல்லவில்லை என்ற நினைவு வந்தது. உங்களை அலுவலகம் எல்லா இடத்திலும் தேடி அலைந்து கடைசியாக இந்த குளிர் அறைக்குள் நுழைந்த போது உங்கள் முனகல் சத்தம் கேட்டது...ஆண்டவருக்கு நன்றி சொல்லி உங்களை காப்பாற்றி வெளியே கொணர்ந்தேன்" என்றார்.
இது ஒரு மிகப் பெரிய நீதி தரும் நிகழ்வு. செக்யூரிட்டி தானே நமது வேலைக்கு தொடர்பில்லாதவர் என்று இல்லாமல் அவருக்கு தினமும் வணக்கம் சொன்னதும், பிறரோடு தொடர்பு வைத்துக் கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அன்பும் நட்பும் நம்மை அரவணைத்துக் காக்கும்.

No comments:

Post a Comment