Monday, August 25, 2014

Miracle happens when we have faith and confidence

அற்புதம்:

சிறுமி கவிதாவின் சகோதரன் பிரகாஷுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் மிகவும் சொல்லத் தயங்கிய விஷயம் என்னவென்றால் பிரகாஷ் உயிருக்கு மிக ஆபத்து. ஆபேரஷன் செய்தால் ஏதேனும் வாய்ப்பு உள்ளது என்பதை எப்படியோ பிரகாஷின் பெற்றோரிடம் தெரிவித்தார்.
அது மட்டும் அல்ல ஏதேனும் 'அற்புதம்' நிகழ வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.

அதைக் கேட்ட கவிதா உடனே வீட்டிற்கு ஓடினாள். தனது அறையில் உள்ள உண்டியலை போட்டு உடைத்தாள். நூற்று பத்து ரூபாய் ஐம்பது காசு இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மருந்துக் கடைக்கு சென்றாள். கையில் இருந்த காசுகளை கடை டேபிள் மீது கொட்டினாள். 

"சார் எனக்கு இந்த காசை வைத்துக் கொண்டு அற்புதம் கொடுங்கள். எனது சகோதரன் மிகவும் நோய்வாய் இருக்கிறான். அவன் பிழைக்க இது மிக அவசியம். தயவு செய்து உதவுங்கள்." 

எவ்வளவு காசு உள்ளது என்றார் கடைக்காரர். நூற்று பத்து ரூபாய் ஐம்பது காசு என்ற பதில் வந்தது குழந்தை கவிதாவிடமிருந்து. 

எங்கள் கடையில் அற்புதம் கிடையாது. மருந்து தான் இங்கு கிடைக்கும். உன் சகோதரனுக்கு என்ன பிரச்சனை என்று வினவினார். காசு இன்னும் வேண்டும் என்றாலும் கொணர்கிறேன் தயவு செய்து அற்புதம் தாருங்கள் என்றாள் கவிதா.

கவிதா சொன்னாள், " அவனுக்கு உடல்நிலை மிக மோசம். அவன் குணமடைய ஆபரேஷன் செய்ய வேண்டும் ....தவிர அற்புதம் தேவை என்று டாக்டர் சொன்னார்"

அந்த பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரிய மனிதர் கவிதாவிடம் பேசினார். "உனக்கு நான் உதவுகிறேன். என்னுடன் வா" 

அந்த பெரிய மனிதர் மிக பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர். உடனே அறுவை சிகிச்சை செய்து பிரகாஷை பிழைக்க வைத்து விட்டு வெளியே வந்தார். வந்து கவிதாவிடம் சொன்னார் "நீ சொன்ன 'அற்புதம்' தான் உன் சகோதரனை காப்பாற்றி இருக்கிறது. எல்லா குடும்ப உறுப்பினரும் அந்த அற்புதத்தை உணர்ந்து கை எடுத்து நன்றி பாராட்டினார்கள்.

அற்புதம் நிகழ்வது நமது நம்பிக்கையினால் மட்டுமே என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

இது விப்ரோ நிறுவன தலைவர் அசிம் ப்ரேம்ஜி அவர்களின் ஒரு கல்லூரி பேச்சில் சொன்ன கதை.

மொழி பெயர்ப்பு : டாக்டர் பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment