Monday, August 25, 2014

Identifying good people

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - இது போன மாசம். இப்போ டிவி மீடியா அக்கம்பக்கம் டீச்சர் நண்பர்கள் வலைதளம் எல்லாம் சேர்ந்த வளர்ப்பில் இது இந்த மாசம்.

ஒருவர் நல்லவர் என்றால் அதே மனிதனை மற்றவர் கெட்டவர் என்பர். நோக்கம் நோக்கு போக்கு எல்லாம் காரணிகள்.

நடை உடை எடை பாவனை எல்லாம் தாண்டி அணிந்திருக்கும் வாட்ச் ,கண்ணாடி, ஷூ....வைத்திருக்கும் வண்டி ,மொபைல், அதில் ஒலிக்கும் பாட்டு ,பார்க்கும் பார்வை, உடன் இருக்கும் நண்பர் ,கையில் இருக்கும் புத்தகம் ,அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை, இப்படி நீளும் பட்டியல் ஒருவரை நல்லவர் கெட்டவர் எனப் பறை சாற்றுகிறது.

அடிக்கடி செல்லும் இடம், செய்யும் பணி, மற்றவர் அபிப்ராயம் இவை கூட காரணிகள்.

முகநூல் பதிவுகள், அனுப்பும் குறுஞ்செய்திகள் இவை கூட பட்டியலில் சேரும்.

நல்லவர் எப்போதும் எல்லோருக்கும் நல்லவரா...வல்லவர் என்பவரை நல்லவர் பட்டியலில் சேர்க்கின்றோம்..இது சரியா?

நல்லவரை பிழைக்கத் தெரியாதவன் லிஸ்டில் சேர்ப்பது சரியா? அறிவாளிகள் அனைவரும் நல்லவரா...?!

அன்பு செய்பவர், அகிலம் மதிப்பவர், அறிவு பகிர்பவர், அமைதி காப்பவர், அரவணைத்துச் செல்பவர் - நல்லவர். இது என் பட்டியல். உங்களது மாறலாம்..மாறும்..தவறில்லை.

பிளஸ் மைனஸ் எல்லோருக்கும் உண்டு. பிளஸ்களை கூட்டி மைனஸ்களை குறைக்க யாவரும் நல்லவர் பட்டியலில் சேரலாம்.

மழை பெய்வதால் நல்லவர் இருக்கிறார்கள் என்பது உறுதி ஆகிறது.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
நல்லவர் வாழட்டும். நல்லோர் பட்டியல் நீளட்டும்...வாழ்க...வளமே பெறுக.

No comments:

Post a Comment