Wednesday, March 9, 2016

Election awareness slogans

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் : by Dr. Balasandilyan
தேர்தல் நாள் விடுமுறை அல்ல
தேசம் மாறும் நம்மால் மெல்ல
தெளிவு வேண்டும் நேர்மை வெல்ல 
ஆள்பவர் யாரென நம் விரல்கள் சொல்ல
கூட்டு முயற்சியே நாட்டு வளர்ச்சி
ஓட்டு அளித்திடு காட்டு உன் முதிர்ச்சி
யார் நமை ஆள்வது உன் விரல் அழுத்து
நேர்மையை நாடு விலகிடும் அழுக்கு
தேர்தல் என்பது மாற்றம்
மாற்றம் எனில் முன்னேற்றம்
குறையட்டும் உனது சீற்றம்
நிறையட்டும் வாழ்வில் ஏற்றம்
தேர்தல் என்றால் புது தெளிவு
தெளிவில் பறக்கும் தலைகுனிவு
ஒட்டு போட வாருங்கள் உங்கள் வாக்கு தாருங்கள்
ஓட்டில் மாற்றம் பாருங்கள் உண்மை பெருமை சேருங்கள்
நமது தேசம் நமது கையில்
நமது சக்தி நம் விரல் மையில்
சாக்கு போக்கு சொல்லாதே
வாக்கு அளித்திட தவறாதே
யார்க்கும் நீ அஞ்சாதே
எதற்கும் நீ கெஞ்சாதே
நேர்மை ஞாயம் மனதில் வை
தேர்தல் நாளில் முடிவு செய்
உரிமையை கடமையை விட்டுத் தரலாமா
உறங்கி இருந்து பின் வாழ்வில் அழலாமா
வாக்கு தவறுவதும் வாக்களிக்க தவறுவதும்
வாழ்வில் மாற்றம் தருமா ?
ஏழையாக இருந்தால் கூட ஏற்றம் வரும் - வாக்களிக்காத
கோழையாக இருந்தால் மாற்றம் வருமா ?
படித்தவரா படிக்காதவரா முக்கியம் அல்ல
வாக்களித்தவரா சாக்கு சொன்னவரா அதுவே முக்கியம் !
செல் ...வாக்களி ...உரிமை காட்டு !
சொல் ...நேர்மையாய் ஓட்டு போட்டு !
நமது தேசம் நமது வாழ்வு
ஓட்டளிக்காதது நமக்கே தாழ்வு !
ஒரு நாள் கடமை மறந்தால்
ஐந்து வருடம் புன்னகை பறக்கும் ...!
ஒரு நாள் தெளிவு பிறந்தால்
ஐந்து வருடம் நன்மை பிறக்கும் !
ஒரு நாள் அச்சம் ....ஐந்து வருடம்
வருத்தம் மிச்சம் ...!
உடனே ஓடு உன் பெயர் தேடு !
ஓட்டு போடு நாட்டுப் பற்றோடு !

No comments:

Post a Comment