Wednesday, March 9, 2016

recent compositions

உன்ன நம்பி ஒலகத்துய எதுத்தேன்
முதமுத முடிவு ஒன்னு எடுத்தேன்
என்னயே உங்கிட்ட கொடுத்தேன்
என்ன செஞ்சே பாட்டு கூட படிச்சேன் (உன்ன)
பிரிஞ்சிக்க நெனைக்காதே புரிஞ்சிக்க
வலைத்தளமும் தேடலும் போல இருக்க
சேர்ந்தே பிறந்தவங்க நாம் ஒன்னுசேர
அர்த்தமான சொல்லே சொல்லின் அர்த்தமே (உன்ன)
காச்சலுக்கு மாத்திரை நீ தானே
கூச்சலுக்கு யென்துணை நீ தானே
பேச்செலாம் உம்பெயர் வேறென்ன
பேருக்குத் தானே என்பேரு நானென்ன (உன்ன)
முடிவுதான் நீயின்னா முதல்ல யென்
முகத்தில படலியே மனசுல வரலியே
முதல்ல பாத்தது யாருன்னு தெரியல
முகமும் முகவரியும் இப்போ நீதான் (உன்ன)
- டாக்டர் பாலசாண்டில்யன்
-------------------
மெய்யாலுமே சொல்றேன் 
உன்னோட நெனப்பாவே கிரேன்னு சொல்றது 
பொய் தான்...
அப்போப்போ என்னப் பத்தி கூட 
நெனைக்கிறேன் ...நீ இல்லாம 
நான் எப்படி வாழறதுன்னு ...!
-----------------------------------------------------
A new composition....in the Y Gen way...
வாழ்க்கைப் ப்ளேட்டின் ஒரு புறம் நீ மறுபுறம் நான்
ஸ்பூனாய் போர்க்காய் ! இணைவோம் மூன்று வேளையும் ஒன்றாய் ..!!
சூடான சூப் போல உந்தன் பார்வை
ஸ்டார்ட்டர் போல உந்தன் சிரிப்பு
மெயின்கோர்ஸ் போல உந்தன் முத்தம்
டெச்செர்ட்ஸ் போல வருவாய் நித்தம் நித்தம் (வாழ்க்கை)
எத்தனை மெனுவில் லிஸ்ட் இருந்தாலும்
என்றும் நிறைவது உன் முகம் தானே
பார்த்தால் போதும் பசியடங்கும்
புன்னகைத்தால் மனம் சக்தி பெறும் (வாழ்க்கை)
உணவாய் உறவாய் உணர்வாய் நீயிருக்க
எத்தனை பில் வந்தாலும் நான் பே பண்ணுவேன்
கனவாய் முகிலாய் கலைந்தால் நீயும்
காற்றை உணவாக்கி பீல் பண்ணுவேன் (வாழ்க்கை)
- டாக்டர் பாலசாண்டில்யன்

No comments:

Post a Comment