Sunday, March 20, 2016

Quotes of Bala in Tamil

சின்னப் பிரச்சினை கூட உங்களை கவலையில் அழுத்தினால் பெரிய வாய்ப்புகளை உஙகளால் சமாளிக்க முடியாது.

வாய் இல்லை என்றால் உரைக்க முடியுமா 
இது மனிதன் 
வாய் இல்லை என்றால் குரைக்க முடியுமா 
இது  .....!

காயப்படுத்தும் / காயப்படும் போது தான் வார்த்தையின் அர்த்தத்திற்கு வலிமை புரிகிறது.

அடைய முடியா இலக்குகள் 
அடக்க முடியா ஆசைகள் - இரண்டுமே 
அவஸ்தை தான் சந்தேகம் என்ன

"நீங்கள் உழைக்கத் தெரிந்தவர்" என்று பெயர் வாங்கினால் உங்கள் வெற்றி நீடிக்கும்...நிலைக்கும்.
"நீங்கள் பிழைக்கத் தெரிந்தவர்" என்று அழைக்கப்பட்டால் உங்கள் வெற்றி கேள்விக்கு உரியது மட்டுமல்ல...கேலிக்குரியது...!!

செழிப்பு ஒரு மயக்கநிலை. வெற்றிக்களிப்பில் பணம் ஒரு உபபொருள். இருப்பினும் வளர்ச்சியை விட வழியேதும் உண்டா?

அனுபவம் மனிதனின் பொறுப்பு. அனுகிரகம் கடவுளின் சிறப்பு

வயதாவது நம் தவறல்ல. தவறிக்கூட அது பற்றி நினைப்பது தான்.

நிறங்களை இனஙகளை பார்ப்பது தவிர்த்துத் திறன்களை மனங்களை பார்க்கக் கற்போம். வாழ்க்கை இனிதான் இனிதாகும்

உனக்குள் இருக்கும் திறமைகளை வைத்து உலகை சாய்க்க வேண்டுமா... உன்னையே மாய்க்க வேண்டுமா? தெரிந்து வாழ்வதும் வாழ்வைக் கொண்டாடுவதும் அவசியம்

இந்த வழி மூடப்பட்டுள்ளது என்ற சாலை அறிவிப்பு நம் பாதையை மாற்றலாம், போய்ச் சேர நினைக்கும் இடத்தை மாற்றாது.

சின்னத்தணல் வெப்பம் தராது. கனலாய் எரி வெற்றி தவறாது. - 

பெற்றதை இழந்து நீ வெறுத்தாயே - பொறு
மற்றதைப் பெற்று நீ சிறப்பாயே 

விழுந்தால் 
ரோஜா இதழைப் போல் விழு 
உனக்கும் சத்தம் கேட்காமல் 
ஊருக்கும் துக்கம் வராமல்...!! 
வீழ்ந்த பின் எழு 
எழுஞாயிரைப் போல்
உன்னுள் உற்சாகமாய்
உலகோர்க்கு ஒளிவிளக்காய்.. 


ஒன்றினை இழந்தாலும் மற்றதாய் நான் வருவேனே 
கன்றினைக் காக்கும் பசு பெற்ற தாய் நான் தருவேனே 


ஆன்மாவிலிருந்து பணியாற்றும் பொழுது 
ஆனந்தநதி உனக்குள் பாயும் தொழுது..!!


அடையாளங்களை இழப்போம். 
அனுதினம் புதிதாய் பிறப்போம் 
அன்புநிலையில் லயிப்பொம் 
ஆனந்தமயமதை சுகிப்போம் 


ஊக்கம் எனும் மருந்து விருதுகள் பெற்றுத்தரும். ஊக்கமருந்து பெற்ற விருதுகளை பிடுங்கி விடும்

மாண்டு விடப் பிறந்தோமில்லை. இன்னல் எது வரினும் மீண்டெழப் பிறந்தவர் நாம். இன்னுமா பரிதவிப்பு?

ஒளியிலிருந்து நிழலைப் பிரித்துப் பார்த்தது யாரு? ஒளியும் நிழலும் ஒன்றென இனி பாரு.. 

உன் அறிவை விற்று 
உலக ஆச்சரியங்களை வாங்கு


விலகியிருக்கும் போது தான் 
விழையும் வினா உனை அறிந்தேன் 
விரும்பியிருக்கும் போது தான் 
விடையே நீயெனப் புரிந்தேன் 


உனக்குள் கரைந்து என்னைத் தொலைக்கவா 
எனக்குள் உறைந்து உன்னை அழைக்கவா 
ஒளியில் விட்டில் போல் உன்னுள் கலக்கவா 
ஒளியே நீயென உணர்ந்து மலைக்கவா 

உனக்குள்ளிருக்கும் தணலைக் காற்றூதி நெருப்பாக்கும் என்னைப் புரிந்து நீ ஒளிர்வாய் 

விதிகளை மட்டுமே பின்பற்றினால் சில நேரம் வாழ்வின் எழில்மிகு விளையாட்டுகளை கைப்பற்றத் தவறி விடுவோம்

பணக்காரர் என்றாலும் மூச்சு இழுத்து விடுவது காற்றைத்தான்...காசை அல்ல..!!

கோடுகளின் மீதும் நிறங்களின் மீதும் நாட்டம் இருந்தால் ஓவியர் ஆகலாம். மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் நாட்டம் இருந்தால் பேச்சாளர் அல்லது எழுத்தாளர் ஆகலாம். வேறு என்ன பிடிக்கும் உங்களுக்கு?!

திரும்பிப் பார்ப்பவர் எல்லாம்
விரும்பிப் பார்ப்பவர் அல்ல..

வெற்றி என்பது எந்தக் கதவு வழியாகவும் வரலாம். ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து நிற்பதும் அவரவர் மனநிலை.

பலவீனம் நம்மை பலமாக அழுத்துகிறது

கோபம் வந்தால் தண்ணீர் அருந்து. கவலை என்றால் நாமமே மருந்து

மகிழ்ச்சியாக இருக்கும் போது பாட்டு கேட்கிறோம். சோகமாக இருக்கும் போது பாடல் வரிகள் கேட்கிறோம்

நேற்று ஊசின சோறு 
இன்று நகரும் ஆறு 
நாளை நிலையில் தேர்...!

வலியும் இன்பமும் நிறைந்த பாதையா
சரியும் தவறும் நிறைந்த பாதையா
எது உனது ?

ஒழுக்கம்
எல்லாவற்றுக்கும் ஓர் இடம்
அனைத்தும் அதனதன் இடத்தில்
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம்
அனைத்தும் அதனதன் நேரத்தில்










No comments:

Post a Comment