Wednesday, March 9, 2016

Some recent writing of mine

அடையாளங்களை இழப்போம். 
அனுதினம் புதிதாய் பிறப்போம் 
அன்புநிலையில் லயிப்பொம் 
ஆனந்தமயமதை சுகிப்போம் 
This is 'Rumi'tic.

ஊக்கம் எனும் மருந்து விருதுகள் பெற்றுத்தரும். ஊக்கமருந்து பெற்ற விருதுகளை பிடுங்கி விடும்

மாண்டு விடப் பிறந்தோமில்லை. இன்னல் எது வரினும் மீண்டெழப் பிறந்தவர் நாம். இன்னுமா பரிதவிப்பு?! Resilience is a must.

This is 'Rumi'tic :
Who has seen a shadow separated from the light? 
ஒளியிலிருந்து நிழலைப் பிரித்துப் பார்த்தது யாரு? ஒளியும் நிழலும் ஒன்றென இனி பாரு.. 
- பாலசாண்டில்யன் 

This Is 'Rumi'tic :
உன் அறிவை விற்று 
உலக ஆச்சரியங்களை வாங்கு

மீர்ப்பூரில் ஆசியப்போர் 
மீட்போர் கோலியா தாவனா
ஜெயிப்போர் இந்தியரே என்றாலும் 
வெற்றிக்கு ஒரே ஏணி தோனி 
வெறியுடன் அடிப்பார் எதிரணிக்கு ஆணி
ஆறடித்து ஜெயிக்க வேறு யாரு?!!
உலகக் கோப்பையில் மேலும் பாரு!!


படித்தால் மேதை என்கிறோம் 
அடித்தால் தாதா என்கிறோம் 
நடித்தால் தலை என்கிறோம் 
குடித்தால் தறுதலை என்கிறோம்


This is 'Rumi'tic :
விலகியிருக்கும் போது தான் 
விழையும் வினா உனை அறிந்தேன் 
விரும்பியிருக்கும் போது தான் 
விடையே நீயெனப் புரிந்தேன் 
-பாலசாண்டில்யன்


This Is 'Rumi'tic... 
உனக்குள் கரைந்து என்னைத் தொலைக்கவா 
எனக்குள் உறைந்து உன்னை அழைக்கவா 
ஒளியில் விட்டில் போல் உன்னுள் கலக்கவா 
ஒளியே நீயென உணர்ந்து மலைக்கவா 
- பாலசாண்டில்யன்


This Is 'Rumi' tic - உனக்குள்ளிருக்கும் தணலைக் காற்றூதி நெருப்பாக்கும் என்னைப் புரிந்து நீ ஒளிர்வாய்
 - பாலசாண்டில்யன்.

விதிகளை மட்டுமே பின்பற்றினால் சில நேரம் வாழ்வின் எழில்மிகு விளையாட்டுகளை கைப்பற்றத் தவறி விடுவோம்.

பணக்காரர் என்றாலும் மூச்சு இழுத்து விடுவது காற்றைத்தான்...காசை அல்ல..!!
- பாலசாண்டில்யன்


திரும்பிப் பார்ப்பவர் எல்லாம்
விரும்பிப் பார்ப்பவர் அல்ல..

வளர்த்து ஆளாக்கிட வாழ்வியல் மதிப்பு போதும்
வளர்த்து பாழாக்கிட வாழ்வில் பணம் ஒன்றே போதும்
வெற்றி என்பது எந்தக் கதவு வழியாகவும் வரலாம். ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து நிற்பதும் அவரவர் மனநிலை.

ஒரு வரிக் கதை:
இன்னைக்கும் இது தானா? வார்த்தை பொறுக்காமல் வீடியோ பார்த்து மலாய் கோப்தா செய்து போட்டோ எடுத்து மகளுக்கு அனுப்பினாள். ஆசையாக மகள் வரும் போது அழுது கொண்டிருந்தாள் அமுதா. கை தவறி மேடை முழுதும் கோப்தா.


ஒரு வரிக் கதை:
வீடு பூட்டிக் கிடந்தது. எங்கே போனார்களோ? கடையில் கொடுத்துச் செய்த சாவியும் பையில் இல்லை. மிகுந்த வெறுப்புடன் பூட்டை இழுத்தால், அட பூட்டவே இல்லை. வேகமாக கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கிளம்பினேன்.


No comments:

Post a Comment