வேறென்ன இம்மனதில்
கிழித்துப் பார் எனது
இதயத்தை நீயும்
உனது பெயரைக் தான்
எழுதி வைத்திருந்தேன்
காதலின் வலியைப்
பிறர் சொல்லக் கேட்டேன்
காதல் என்னவென்று
நீயும் உணர்த்தி விட்டாய்
உன் மனம் கிடைத்தது
கனவு பலித்தது போல்
பிடிவாதத்தால் கிடைத்தது
உன் மனதில் என் நிழல்
மனதின் வலி பெருகி
என் மனம் பித்தானது
பித்தர்கள் இவ்வுலகில்
வலியினை ஏனோ
மருந்தென் றாரே...
(வேறென்ன)
நெஞ்சம் முழுவதும்
உந்தன் முகந் தான்
வாழ்க்கை முழுவதும்
உனக்கே அர்ப்பணம்
துடிக்கிற இதயத்தில்
உந்தன் காதல் தான்
காதல் மட்டுமே
எந்தன் வாழ்க்கை தான்
உனைத் தவிர வேறு
ஞாபகம் இல்லை
நீதான் நிறைந்தாய்
ஆம் முழுவதும் நீதான்
மனம் உனை எண்ணி
பூஜை செய்தது
காதலின் பெயரை நான்
கடவுள் என்றேனே
(வேறென்ன)
Aur Is Dil Mein kya rakha hai...
தமிழில் முயற்சி: பாலசாண்டில்யன்
(என்ன இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான்... அந்த உணர்வுகள் வேறு... வலி கூட பாயும் ஒளி... தருமே புது நிம்மதி)
No comments:
Post a Comment