Monday, July 21, 2025

காஞ்சி ஆச்சார்யாள் பாடல் :

 காஞ்சி ஆச்சார்யாள் பாடல் :

ராகம் : பெஹாக்
- பாலசாண்டில்யன்
தரிசனம் பெறும் பாக்கியம் - கிடைத்திட
கரிசனம் பெரும் வாக்கியம் - நகரேஷு காஞ்சியில் கண நேர (தரிசனம்)
சமிக்ஞையில் புரிந்திடுவார் அற்புதங்கள்
தவிக்கையில் அவர் தருவார் ஆறுதல்கள்
எவர் எது நினைப்பதுமே அவர் அறிவார்
அவர்க்கது கேட்காமல் தந்திடுவார் - அவரின் (தரிசனம்)
சொல்லாமல் உணர்ந்திடுவார் பக்தர் சிரமம் -அருட்
சொல்லாலே துடைத்திடுவார் படுந்துயரம்
எல்லாமும் அறிந்திட்ட ஞானஸ்வரூபம்
எல்லோர்க்கும் வரமளிக்கும் அருட்சாகரம் - அவரின் (தரிசனம்)
அன்பு நெறி ஆன்மீகம் தழைத்திட ஓர்
அரியநல் யாகம் செய்த தவப்பயனவர்
வெற்றி வழங்கிடும் விஜயேந்திர சரஸ்வதியுடன்
சக்தி தரும் சத்யசேகரேந்திர சரஸ்வதியின் - அற்புத (தரிசனம்)

No comments:

Post a Comment